azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Every being is a pilgrim towards Dharmakshetra (Righteous land), which is also the abode of peace. But, on the way, he or she is led into the by-lanes and alleys of objective pleasure by the senses, to which the person becomes a slave. People are eager to know about all kinds of trivialities like the details of others’ lives, other places, etc., but they have no keenness to know their own origin. People are deeply sunk in ignorance about their source and substance, their goals and destiny. You are the inheritor of unlimited wealth and fortune, yet you feel like a poor man (pauper). Remove this boundary of ego within your mind – you will then recognize the vastness of yourself.(Divine Discourse, Aug 16, 1964.)
ஒவ்வொரு ஜீவராசியும் , சாந்தியின் உறைவிடமான தர்மக்ஷேத்திரத்தை நோக்கிச் செல்லும் புனித யாத்திரீகர்களே. ஆனால், வழியில் அவரோ,அவளோ உலகியலான இன்பங்கள் என்ற சந்து பொந்துகளில், புலன்களால் இட்டுச் செல்லப் பட்டு, அந்த நபர் அவைகளுக்கு அடிமையாகி விடுகிறார். மனிதர்கள், மற்றவர்களது வாழ்க்கை, பிற இடங்கள் போன்ற அற்ப விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்களே அன்றி, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பற்றித் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. மனிதர்கள் தங்களது மூலாதாரம் மற்றும் இயல்பு, அவர்களது விதி மற்றும் குறிக்கோள் ஆகியவை பற்றிய அறியாமையில் ஆழ்ந்து புதைந்து கிடக்கிறார்கள். நீங்கள் அளவற்ற செல்வம் மற்றும் அதிர்ஷ்டங்களுக்கு வாரிசு , ஆனால் நீங்கள் உங்களை பரம ஏழையாகக் கருதுகிறீர்கள். உங்கள் மனதில் இருக்கும் இந்த அஹங்கார எல்லையை நீக்கி விடுங்கள் - பின்னர் நீங்கள் உங்களது பரந்த விரிந்த தன்மையை உணருவீர்கள்.