azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 03 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 03 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

While in the forest, Rama was once reclining with His head on the lap of Sugriva and the monkey leaders were around Him. The moon was shining overhead in full glory, but there was the tell-tale spot which marred the fullness of the effulgence. Rama asked each one of them what the spot indicated. Each one gave a different explanation. The reflection of the sea, one said, a deep pit, said another; a mountain range said a third. It was Hanuman’s turn – He said, “It is Your reflection I see on the moon, Your colour, nothing else!” That was a simple example of his devotion. Everywhere, every time, in every person, he only saw Lord Rama. One must dedicate all tasks as offerings to the Lord. Never deviate from that attitude. Hanuman was such a devotee; Rama was the very life-breath for him.(Divine Discourse, Aug 15, 1964.)
ஒரு முறை காட்டில், ஸ்ரீராமர் ,சுக்ரீவனது மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார்; வானரத் தலைவர்கள் அவரை சூழ்ந்திருந்தார்கள்.முழு நிலவு தனது ஒளியுடன் ஆகாயத்தில் பிரகாசித்துக் கொண்டு இருந்தது; ஆனால் அதற்கே உரித்தான, அதன் ஒளியை குறைக்கும் ஒரு மங்கலான இடம் அதில் தெரிந்தது. ஸ்ரீராமர் ஒவ்வொருவரையும் அந்த இடம் என்னவாக இருக்கும் என்று கேட்டார். ஒவ்வொருவரும் விதவிதமான விளக்கத்தைச் சொன்னார்கள். கடலின் பிரதிபலிப்பு என்றார் ஒருவர்: ஆழ்ந்த குழி என்றார் இன்னொருவர்; ஒரு மலைத் தொடர் என்றார் மற்றும் ஒருவர்.ஹனுமானிடம் வந்தபோது அவர்,'' உங்களுடைய பிரதிபலிப்பைத் தான் நான் நிலவில் பார்க்கிறேன், அது உங்களது வண்ணமே அன்றி வேறல்ல '' என்றாராம். இதுவே அவரது பக்திக்கான எளிய உதாரணம்.ஒவ்வொரு இடத்திலும்,ஒவ்வொரு தடவையும், ஒவ்வொருவரிலும் அவர் பகவான் ஸ்ரீராமரையே கண்டார். ஒருவர் தனது அனைத்து செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். அந்த மனப் பாங்கிலிருந்து ஒருபோதும் விலகாதீர்கள். ஹனுமான் அப்படிப் பட்ட பக்தர்; ஸ்ரீராமரே அவரது உயிர் மூச்சாக இருந்தார்.