azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 31 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 31 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord cares for your concentration (Ekagratha) and purity of mind (Chittashuddhi). You need not worry if you are near or far from Him. He has no ‘near’ or ‘far’. When the address you write is correct and clear, your letter will be delivered whether it is to the next street or a distant city. Remembering the Lord (Smarana) is the stamp. Recapitulating His Glory in your heart (Manana) is the Address. Select any Name that appeals to you for Smarana and Manana. Be careful not to talk ill of other Names and Forms. Conduct yourself like the woman in a joint family. She respects all elders in the family (father in law or brother in law), but her heart is dedicated to her husband, whom she loves and reveres in a special manner. Never carp at others’ faith, it reveals that your devotion is fake. If you are sincere, you will appreciate the sincerity of others.(Divine Discourse, Aug 15, 1964.)
இறைவன் உனது ஒருமித்த மனக்குவிப்பு(ஏகாக்ரதா) மற்றும் இதயத் தூய்மையைத்( சித்த சுத்தி) தான் பார்க்கிறான். நீங்கள் அவனுக்கு அருகாமையிலோ அல்லது தூரத்திலோ இருப்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நீங்கள் எழுதியுள்ள விலாசம் தெளிவாகவும்,சரியாகவும் இருந்தால், பக்கத்துத் தெருவானாலும், தூரத்து பட்டினமானாலும்,உங்கள் கடிதம் போய்ச் சேர்ந்து விடும்.இறைவனை நினைப்பதே( ஸ்மரணம்) ஸ்டாம்ப் போன்றது. அவனது மஹிமையை நெஞ்சில் நினைவு கூர்வது(மனனம்) விலாசம் போன்றது. இவை இரண்டிற்கும் உங்களுக்குப் பிடித்த இறை நாமத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.பிற நாம, ரூபங்களை இகழ்ந்து பேசாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்ணைப் போன்று இருங்கள். மாமனார், மைத்துனர் போன்ற பெரியவர்களை அவள் மதிக்கிறாள்; ஆனால் அவளது இதயத்தை, தான் நேசித்து, தனிப்பட்ட முறையில் மதிக்கும் தனது கணவனுக்கே அர்ப்பணம் செய்கிறாள். பிறரது மதத்தை ஒரு போதும் பழிக்காதீர்கள்; அது உங்களது பக்தி போலியானது எனக் காட்டி விடும். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் தான் பிறரது நேர்மையைப் பாராட்டுவீர்கள்.