azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

If you want to attain God, cultivate love. If you promote love and look upon all with love, hatred will never be your lot. That is the one important lesson I teach always. I do not ask that you should become a scholar or a recluse or an ascetic skilled in recitation of holy Names and Meditation (Japa and Dhyana). God only examines, “Is your heart full of love?” Firmly believe that Love is God, Truth is God. Love is Truth, Truth is Love. For it is only when you love that you have no fear. Fear is the mother of falsehood. If you have no fear, you will adhere to truth. The mirror of love reflects the Divine Self within you and reveals to you that the Divine Self within you is Universal and is immanent in every being.(Divine Discourse, Jul 25, 1958.)
நீங்கள் இறைவனை அடைய விரும்பினால், அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அன்பைப் பேணி,அனைவரிடமும் அன்பு செலுத்தினால், வெறுப்பு என்பதே உங்களிடம் இருக்காது. இதுவே நான் எப்போதும் அளிக்கும் ஒரு முக்கியமான போதனையாகும். நான் உங்களை, ஜபம் மற்றும் தியானம் செய்கின்ற ஒரு பண்டிதர் அல்லது துறவி அல்லது சன்யாசியாக ஆகச் சொல்லவில்லை. இறைவன், '' உங்களது இதயம் அன்பால் நிரம்பி இருக்கிறதா?'' என்று மட்டும் தான் பார்க்கிறான். அன்பே இறைவன், ஸத்யமே இறைவன், அன்பே ஸத்யம், ஸத்யமே அன்பு. ஏனெனில், நீங்கள் அன்பு செலுத்தினால் தான் அச்சமின்றி இருப்பீர்கள். அச்சம் என்பது பொய்மையின் தாய் போன்றது. நீங்கள் அச்சமின்றி இருந்தால், ஸத்யத்தைக் கடைப் பிடிப்பீர்கள். அன்பெனும் கண்ணாடி உங்களுள் உள்ள தெய்வீக ஆத்மாவைப் பிரதிபலித்து, அதுவே பிரபஞ்சமயானதும், ஒவ்வொரு ஜீவராசியின் உள்ளும் உறைகிறது என்பதை எடுத்துக் காட்டும்.