azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The three qualities (gunas) of the mind have to be transcended sequentially. Lethargy (Thamas) should be transformed into passionate activity (Rajas) and Rajas into serenity and poise (Sathwa) and finally into atributelessness. The Gunas bind the person and leave impressions. Thamas is like the worms that creep and crawl in offal. Rajas is like the fly that sits on foul and also good things. Sathwa is like the bee that visits only fragrant flowers. But all the three are drawn towards objects nonetheless. One should be free from all traces of attachment. When your heart is infested with flies and worms, the pesticide of Namasmarana (constant remembrance of the Name of the Lord) has to be used for disinfecting.(Divine Discourse, Aug 15, 1964.)
மனதின் மூன்று குணங்களையும் அதே வரிசையில் கடக்க வேண்டும்; சோம்பேறித்தனமான தமோ குணத்தை, அதிக ஆர்வமுள்ள செயல்பாடான ரஜோ குணமாக மாறி ,பின்னர் அதையே சாந்தமும்,சமநிலையும் கொண்ட ஸத்வ குணமாக மாற்றி, இறுதியில் குணங்களே அற்ற நிலைக்கு இட்டுச் சென்றாக வேண்டும். குணங்கள் மனிதனைப் பந்தப்படுத்தி, வாஸனைகளை விட்டுச் செல்கின்றன. தமஸ் என்பது கழிவுகளில் ஊர்ந்து செல்லும் புழுக்களைப் போன்றது. ரஜஸ் என்பது துர்நாற்றமுடையவற்றிலும், நல்லவற்றிலும் உட்காரும் ஈக்களைப் போன்றது. ஸத்வ குணமோ, நறுமணமுள்ள மலர்களில் மட்டுமே அமரும் தேனீயைப் போன்றது. ஆனால், எப்படி ஆனாலும், மூன்று குணங்களும் பொருட்களினால் ஈர்க்கப் படுபவையே. ஒருவர் அனைத்து விதமான பற்றுதல்களின் சுவடுகள் கூட இல்லாதவாறு இருத்தல் வேண்டும். உங்கள் இதயம் ஈக்களாலும், புழுக்களாலும் நிரம்பி இருந்தால், நாமஸ்மரணை என்ற பூச்சி மருந்தை அவற்றை நீக்குவதற்காகப் பயன்படுத்த வேண்டும்.