azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The first step in Self-Enquiry (Athma Vichara) is the practice of the truth that whatever gives you pain, gives pain to others and whatever gives you joy, gives joy to others. So do unto others as you would like them do unto you; desist from any act in relation to others, which, if done by them will cause you pain. Thus, a kind of reciprocal relationship will grow between you and others and gradually you reach the stage when your heart thrills with joy when others are joyful and shudders in pain when others are sad. This is not the kind of affection towards those who are dear to you or those who are your kith and kin. This sharing of joy and grief is automatic, immediate, and universal. It is a sign of great spiritual advance, the wave knows that it is part of the ocean; all the waves are but temporary manifestations of the sea and with the same taste of the ocean itself.(Divine Discourse, Jul 25, 1958)
எவை உங்களுக்குத் துன்பம் அளிக்கிறதோ அவை பிறருக்கும் துன்பம் அளிக்கிறது, எவை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ, அவை மற்றவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்ற உண்மையைக் கடைப் பிடிப்பதே ஆத்ம விசாரத்தின் ( சுய பரிசோதனை) முதல் படியாகும். எனவே, நீங்கள் மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்;பிறரைப் பொருத்தவரை, எந்தக் காரியத்தை அவர்கள் உங்களுக்குச் செய்தால், உங்களுக்குத் துன்பம் ஏற்படுமோ, அதை நீங்கள் பிறருக்குச் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இவ்வாறு, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர உறவு வளர்ந்து, படிப்படியாக, பிறர் சந்தோஷப் படும்போது உங்கள் இதயம் குதூகலித்து, பிறர் துயரடையும் போது,அதுவும் துன்பத்தால் துடிக்கின்ற ஒரு நிலையை அடைவீர்கள். உங்களுக்குப் பிடித்தமானவர்கள் அல்லது உங்களது சொந்த பந்தங்களின் மீது நீங்கள் வைக்கும் பிரியம் போன்றதல்ல இது. இவ்வாறான சுக,துக்கங்களைப் பகிர்ந்து கொள்வது தானாகவே தோன்றுவதும், உடனடியானதும், பிரபஞ்ச மயமானதும் ஆகும். அலைகள் கடலின் ஒரு அங்கமே; அனைத்து அலைகளும் கடலின் உருவங்கள் மற்றும் கடலின் அதே சுவையைக் கொண்டவையே என்ற இந்த மனப்பாங்கு மிகச் சிறந்த ஆன்மீக முன்னேற்றத்தின் அறிகுறியாகும்.