azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion is like a King who has two aides-de-camp called Wisdom (Jnana) and Detachment (Vairagyam). Without these body-guards, devotion is never safe or secure. Devotion must be built upon the foundation of Wisdom and must flower as Detachment from the world. The man of wisdom (Jnani) is unmoved by the agitating feelings and emotions and is unshaken by the storms of good fortune and bad (a sthithaprajna). The one who is detached (vairagi) is the one who has rid himself of the three gunas (or qualities of the mind). A devotee is one who has love towards all living beings. Bhakthi, Jnana and Vairagya are three peaks of the same Himalayan Range. Prema creates daya (compassion), Vairaagya induces dhama (tolerance); and, jnaana (wisdom) leads you along the path of dharma.(Divine Discourse, Aug 14, 1964)
பக்தி என்பது ,ஞானம் மற்றும் வைராக்யம் என்ற இரண்டு காவலர்களைக் கொண்ட அரசன் போன்றது.இவர்கள் இல்லை என்றால், பக்தி ஒரு போதும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பக்தி, ஞானம் என்ற அஸ்திவாரத்தின் மீது எழுப்பப் பட்டு, உலகின் மீது வைராக்யமாக பரிமளிக்க வேண்டும். ஞானியானவன்,கலக்கம் தரும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளால் அசைக்கப் படுவதும் இல்லை; ஏற்றத் தாழ்வுகள் என்ற புயல்களால் பாதிக்கப் படுவதும் இல்லை (ஸ்திதப்ரக்ஞன்). வைராக்யம் பெற்ற ஒருவன் முக்குணங்களையும் தன்னிடமிருந்து நீக்கி விட்டவன். பக்தன் என்பவன் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு கொண்டவன். பக்தி, ஞானம், வைராக்யம் என்ற மூன்றும் ஒரே இமய மலைத் தொடர்ச்சியின் மூன்று குன்றுகளாகும். ப்ரேமை, தயையை உருவாக்குகிறது, வைராக்யம் சகிப்புத் தன்மையைத் தூண்டுகிறது; ஞானம் தர்மத்தின் பாதையில் உங்களை இட்டுச் செல்கிறது.