azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 17 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 17 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Every being is Divine, take it from Me! All of you are really here on a holy mission, for a divine purpose. To consider yourself weak or sinful is itself a sin! You must earn your birthright, which is Peace (Shanthi). Restlessness (ashanthi) is an unnatural state. To recover this heritage of peace, people try many methods – accumulation of riches, maintenance of good health, mastery of knowledge, cultivation of arts, etc. All these are not fundamental. Three basic needs remain even after all these methods are exhausted - the need for Truth, Light and for Immortality. It is only when these are won that Peace will be permanently established.(Divine Discourse, Jul 22, 1958.)
நான் சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் அனைவரும் தெய்வீகமானவர்களே ! நீங்கள் அனைவரும் இங்கு ஒரு புனித நோக்கத்துடன், தெய்வீகக் காரணங்களுக்காக வந்திருக்கிறீர்கள். உங்களை பலஹீனர்களாகவோ, பாவிகளாகவோ கருதுவதே பாவம் ! உங்களது பிறப்புரிமையான சாந்தியை நீங்கள் கண்டிப்பாகப் பெற்றே ஆக வேண்டும். சாந்தியின்றி இருக்கும் நிலை செயற்கையானது.இந்தப் பரம்பரைச் சொத்தான சாந்தியைப் பெற, மனிதர்கள் பல முறைகளைக் கையாளுகிறார்கள் - செல்வத்தைக் குவிப்பது,உடலை ஆரோக்யமாக வைத்துக் கொள்வது, அறிவு கூர்மையைப் பெறுவது, கலைகளை வளர்த்துக் கொள்வது எனப் பலப் பல. இவை அனைத்தும் அடிப்படையானவை அல்ல.இந்த அனைத்து முறைகளையும் கையாண்ட பிறகும் மூன்று அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆகாமல் இருக்கின்றன - சத்தியம்,ஞானம் மற்றும் அமரத்துவம் ஆகியவற்றின் தேவைகள். இவற்றை வென்றால் தான் நிலையான சாந்தியைப் பெற முடியும்.