azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind must become bhakthimaya (saturated with devotion to God). The intelligence must be transformed into Jnana (divine knowledge). The body must be a willing and efficient instrument for the practice of righteousness. Such a life is indeed the crown and glory of humanity. The rest are merely contaminated, contained and caged lives! So sadhana (spiritual endeavours) alone makes life worth while; the rest are like froth which is fake and momentary. Join the company of the good, the striving, the yearning spiritual aspirants and you will soon reach the stage of peace within and harmony without.(Divine Discourse, Aug 14, 1964.)
மனம் இறை பக்தி மயமானதாக ஆக வேண்டும்.புத்தி என்பது ஞானமாக மாற்றம் அடைய வேண்டும். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில், உடல் விருப்பத்துடனும்,திறமையுடனும் வேலை செய்யும் கருவியாக இருக்க வேண்டும். அப்படிப் பட்ட வாழ்க்கையே மனித குலத்திற்கே புகழ் கொண்டதும், மகுடம் போன்றது ஆகும். மற்றவை எல்லாம் மாசடைந்த,குறுகிய, கூண்டில் அடைக்கப் பட்ட வாழ்க்கைகளே ! எனவே, ஆன்மீக சாதனையே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது; மற்றவை எல்லாம் போலியானதும், தற்காலிகமானதும் ஆன கடல் நுரையைப் போன்றதாகும். நல்லவர்கள்,ஆன்மீக சாதகர்கள் ஆகியோரின் சங்கத்தில் சேருங்கள்; வெகு விரைவில் உள் மனதில் சாந்தியும், வெளி உலகில் இசைவும் கொண்ட நிலையை நீங்கள் அடைவீர்கள்.