azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as you attend to the needs of the body regularly, feeding it three times a day to keep it in good running condition, so too spend some time regularly to keep your inner consciousness in good trim. Spend one hour in the morning, another at night and the third in the early hours of the dawn (the Brahma Muhurtha) for japam (contemplation) and meditation on the Lord. You will find great peace descending upon you and new sources of strength welling up within as you progress in this spiritual practice (Sadhana). After sometime, the mind will dwell on the Name, wherever you are and whatever you are engaged in. Peace and Joy will become your inseparable companions.(Divine Discourse, Mar 25, 1958.)
நன்றாக வேலை செய்வதற்காக,தினமும் மூன்று வேளை சாப்பாடு போட்டு, உங்களை உடம்பின் தேவைகளை எவ்வாறு கவனித்துக் கொள்கிறீர்களோ, அவ்வாறே, உங்களது அந்தராத்மாவையும் , சீராக வைத்துக் கொள்ள சிறிது நேரத்தை செலவிடுங்கள். காலையில் ஒரு மணி நேரம், மற்றொரு மணி நேரம் இரவில், மூன்றாவது ஒரு மணி நேரம் விடியற்காலையில் ( ப்ரம்ம முஹூர்த்தம்) , இறைவனைக் குறித்த ஜபம் மற்றும் தியானத்தில் செலவிடுங்கள். இந்த ஆன்மீக சாதனையில், நீங்கள் முன்னேறும் போது, உங்களுள் ஒரு சிறந்த அமைதி உருவாவதையும்,புதிய சக்தியின் ஊற்று எழுவதையும் உணர்வீர்கள். சில நாட்களுக்குப் பிறகு,நீங்கள் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டு இருந்தாலும், உங்கள் மனம் இறைவனது நாமத்தில் நிலை கொண்டு இருக்கும். சாந்தியும்,சந்தோஷமும் உங்களது இணை பிரியா நண்பர்கள் ஆகி விடுவார்கள்.