azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 12 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 12 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You can understand Radha only if you can fathom the depth of her thirst for Krishna. Radha believed that Krishna is the Aadhar (basis). She performed Araadh (worship) in a continuous Dhara (stream). In fact she is Prakrithi (nature), another form of the Lord Himself. How can those, who are full of evil tendencies and impulses grasp that relationship? The recitation of the Name of the Lord is the best method for cleansing the mind of all these evil impulses. If you have pure and steady faith in the Lord, He will provide for you, not just food, but the nectar of immortality itself. You have the potential in you to make Him grant you that boon.(- Divine Discourse, Aug 14, 1964.)
ஸ்ரீக்ருஷ்ணர் மீது ராதைக்கு இருந்த பக்தியின் ஆழத்தை உங்களால் அளக்க முடிந்தால் தான், உங்களால் ராதையைப் புரிந்து கொள்ள முடியும்.ராதை ஸ்ரீக்ருஷ்ணரே அனைத்திற்கும் ஆதாரம் ( ஆதார்) என முழு நம்பிக்கை கொண்டிருந்தாள். அவள் இடையறாது நீரோடை (தாரா ) போல அவருக்கு வழிபாடு (ஆரத்) செய்தாள்.உண்மையில் அவள் இறைவனின் மற்றொரு உருவமான இயற்கையே ( ப்ரக்ருதி ). தீய குணங்களும், உணர்வுகளும் கொண்டோரால் இந்த உறவை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? இறை நாமஸ்மரணையே, மனதிலிருந்து அனைத்து தீய உந்துதல்களையும் நீக்குவதற்கான சிறந்த வழி. உங்களுக்கு தூய்மையான மற்றும் நிலையான பக்தி இறைவன் பால் இருக்குமானால், அவன் உங்களுக்கு அன்னம் மட்டுமல்ல, அமரத்துவம் அளிக்கும் அமுதத்தையே அளித்திடுவான். அவனை உங்களுக்கு அந்த வரம் அளிக்குமாறு செய்து விடும் சக்தி உங்களிடம் இருக்கிறது.