azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 07 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 07 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

All beings have to do actions (Karma), it is an universal inescapable obligation. Some feel that only meritorious acts or sinful acts are entitled to be called karma, but your very breathing is karma. There are physical, mental and spiritual karmas and doing each one of these for the good of the Self is called dedication. Do not waste a single moment of your life, for time is the body of God. He is known as Kaalaswarupa (of the Form of Time). It is a crime to misuse time or to waste it in idleness. Like the force of gravitation which drags everything down, the pull of sloth (Thamoshakthi) will drag you relentlessly down. So you must be ever on the watch, be ever active.(Divine Discourse, Mar 25, 1958.)
அனைத்து ஜீவராசிகளும் கர்மா செய்தே ஆக வேண்டும் என்பது இந்த பிரபஞ்சத்தின் தவிர்க்க முடியாத கடமையாகும். சிலர் புண்ய அல்லது பாபகரமான செயல்களையே கர்மா எனக் கூறலாம் என எண்ணுகிறார்கள், ஆனால் நீங்கள் சுவாசிப்பதே கர்மாதான். உடல்,மனம் மற்றும் ஆத்மாவைச் சார்ந்த கர்மாக்கள் இருக்கின்றன; இவை ஒவ்வொன்றையும் ஆத்மாவின் நலனுக்காக செய்வதே அர்ப்பணிப்பாகும்.உங்கள் வாழ்வின் ஒரு கணத்தைக் கூட வீணடிக்காதீர்கள், ஏனெனில் காலமே இறைவனின் உடலாகும்.அவன் காலஸ்வரூபன் என அழைக்கப் படுகிறான்.காலத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோ அல்லது சோம்பேறித்தனமாக வீணடிப்பதோ குற்றமாகும். எவ்வாறு புவி ஈர்ப்பு சக்தி அனைத்தையும் கீழ் நோக்கி இழுக்கிறதோ, அவ்வாறே சோம்பேறித்தனம் (தமோசக்தி), உங்களை இடையறாது கீழே இழுத்துத் தள்ளி விடும். எனவ நீங்கள் எப்போதும் கவனமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.