azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Though you cannot see Rama or Krishna, you worship them because you believe in scriptures and elders have taught you so. But how is it that you are forgetting your parents, who are responsible for your progress in life? First and foremost, you should show gratitude to your parents, love them, and respect them. Your blood, your food, your head, and your money - all these are gifts of your parents. You do not receive these gifts directly from God. Young children understand the meanings of the word apple or dog only by seeing their pictures. Similarly, it is only after seeing the parents that one can understand the existence of God. All that is related to God is only indirect experience. It is only the parents whom you can see and whose love you can feel. So consider your parents as God. God will be pleased and will manifest before you only when you love and respect your parents.(Divine Discourse, May 6 1999.)
நீங்கள் ஸ்ரீராமரையோ, ஸ்ரீகிருஷ்ணரையோ பார்த்ததில்லைல, ஆனால் நீங்கள் சாஸ்திரங்களை நம்புவதாலும், பெரியோர்கள் கூறியதாலும், அவர்களை வழிபடுகிறீர்கள். ஆனால், உங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குக் காரணமான பெற்றோர்களை எப்படி மறந்து விடுகிறீர்கள் ? முதன் முதலில், நீங்கள் உங்களது பெற்றோர்களுக்கு நன்றி கூறி,அன்பு செலுத்தி, அவர்களை மதிக்க வேண்டும். உங்களது ரத்தம்,உணவு,புத்தி மற்றும் செல்வம் ( ப்ளட்டு,௨ஃபுட்டு,ஹெட்டு, துட்டு) இவை அனைத்தும் உங்கள் பெற்றோர்கள் அளித்த பரிசுகளே. இந்தப் பரிசுகளை நீங்கள் இறைவனிடமிருந்து நேராகப் பெறுவதில்லை. சின்னக் குழந்தைகள் ஆப்பிள், நாய் என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அவற்றின் படங்களைப் பார்த்தே புரிந்து கொள்கிறார்கள். அதைப் போலவே, தங்களது பெற்றோர்களைப் பார்த்தே ஒருவர் இறைவன் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். இறைவனைப் பற்றிய அனைத்தும் மறைமுகமான அனுபவங்களே. பெற்றோர்களே நீங்கள் காணக்கூடியவர்கள்; அவர்களது அன்பே நீங்கள் உணர முடிகின்ற ஒன்று. எனவே உங்களது பெற்றோர்களை தெய்வமாகவே கருதுங்கள். நீங்கள் உங்களது பெற்றோரை நேசித்து, மதித்தால் தான், இறைவன் மகிழ்ச்சி அடைந்து உங்கள் முன் ப்ரத்யக்ஷம் ஆவான்.