azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

I refuse to call any person a naasthika (an atheist). All beings exist as a result of His Will, in accordance with His Plan; no one is beyond His Grace. Everyone has Love towards someone or something and that Love is a spark of the Divine. Everyone has ultimately to base his life on some Truth; that Truth is God. No life can be lived out in complete defiance of Truth; one has to pay heed to Truth and speak the truth to someone in order to make life worth living. Now, that moment is God's moment and at that moment when one utters the truth or loves, or serves, the person is a theist. It is also the responsibility of all pious individuals to demonstrate in and through their lives that piety is not weakness but strength; that it opens up a vast spring of power and that a person with faith in God can overcome obstacles much more easily than one who has not.(Divine Discourse, Mar 24, 1958.)
நான் யாரையும் நாஸ்திகன் என்று அழைக்க மறுக்கிறேன். அனைத்து ஜீவராசிகளும் இறைவனது ஸங்கல்பத்தால், அவனது திட்டங்களின் படி தான் இருக்கின்றன; எவரும் அவனது கருணைக்கு அப்பாற்றப்பட்டவர் அல்ல. ஒவ்வொருவரும் எவர் மீதாவது அல்லது ஏதாவது ஒன்றின் மீது அன்பு கொண்டு தான் இருக்கிறார்கள்; அந்த அன்பே தெய்வீகத்தின் ஒரு கீற்றுத் தான். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை ஏதோ ஒரு சத்தியத்தின் அடிப்படையில் தான் கொண்டு இருக்கிறார்கள்; அந்த சத்தியமே இறைவன். எந்த ஒரு உயிரும் சத்தியத்தை முழுமையாக மீறி இருக்க இயலாது; ஒவ்வொருவரும் சத்தியத்தை மதித்தே ஆக வேண்டும்; தங்களது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்றால்,எவரிடமாவது சத்தியத்தைப் பேசியே ஆக வேண்டும். இப்போது,அந்தக் கணமே, இறைவனது நேரமாகும்; எப்போது ஒருவர் சத்தியத்தைப் பேசுகிறாரோ அல்லது அன்பு செலுத்துகிறாரோ அல்லது சேவை ஆற்றுகிறாரோ, அந்த மனிதர் ஆஸ்திகரே. இறை பக்தி உள்ள அனைவரும் தங்கள் வாழ்க்கையின் மூலம், பக்தி என்பது வலிமையானது,பலஹீனமல்ல; அது பரந்த வலிமையின் ஊற்றைத் திறக்கிறது; இறைவன் மீது நம்பிக்கை கொண்ட ஒருவர் , அத்தகைய நம்பிக்கை அற்ற ஒருவரை விட, அனைத்து தடைகளையும் எளிதாக வெல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.