azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You must pay attention to the small details in your daily life, for devotion (bhakthi) is not just a pose one strikes. It is a series of little acts, directed by the attitude of reverence for Divinity in all beings. Watch for the lie that lurks on the tongue, the violence that lurks behind your fist, the ego that lurks stealthily behind a deed. Restrain them before they grow into habits and settle down as character to thwart your destiny. God is like a shopkeeper who has a store full of all the things that you need in your life. If you, as customer, go to the shop and ask for a towel, can the shopkeeper hand out a shirt? God is like that, He hands out exactly what you ask for. Material things are not at all important. Discriminate and ask God for Devotion (Bhakthi) and Spiritual Wisdom (Jnana).(Divine Discourse, Aug 13, 1964).
Devotion is not a uniform to be worn on certain days and then to be put aside. - Baba
நீங்கள் அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்த வேண்டும் ஏனெனில் பக்தி என்பது வெறும் நடிப்பு அல்ல. அது, அனைத்து ஜீவராசிகளிலும் உறையும் தெய்வீகத்தின் மீது பெருமதிப்பைக் காட்டும் சிறு சிறு செயல்களின் தொடராகும். உங்கள் நாவின் பின் பதுங்கி இருக்கும் பொய்மை, உங்கள் கரங்களின் பின் பதுங்கி இருக்கும் வன்முறை, திருட்டுத் தனமாக உங்கள் செய்கையின் பின் பதுங்கி இருக்கும் அஹங்காரம் ஆகியவற்றை கவனியுங்கள். அவை பழக்கங்களாக வளர்ந்து, உங்களது குறிக்கோளை முறியடிக்கும் குணாதிசியங்களாக அமருவதற்கு முன் அவற்றைத் தடுத்து நிறுத்தி விடுங்கள். உங்களது வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேமித்து வைத்திருக்கும் கடைக்காரர் போன்றவன் இறைவன். நீங்கள், ஒரு வாடிக்கையாளராக அந்தக் கடைக்குச் சென்று ஒரு துண்டைக் கேட்டால் அவர் ஒரு சட்டையைத் எடுத்துத் தர முடியுமா? இறைவனும் அவ்வாறே, நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ , குறிப்பாக அதையே உங்களுக்குத் தருகிறான். உலகியலான பொருட்கள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. பகுத்தாராய்ந்து, இறைவனிடம் பக்தியையும் ,ஞானத்தையும் கேளுங்கள்.
பக்தி என்பது சில நாட்களில் மட்டும் அணிந்து கொண்டு ,பின்னர் ஒதுக்கி வைத்து விடும் சீருடை போன்றது அல்ல - பாபா