azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Discard all low desires for a few acres of land, a fat account in the bank, or a few more bungalows or cars. Desire rather the joy that will never fade; a joy that is deep, steady and strong - the joy of Divine realization. One has only to know one-self in order to contact the springs of Bliss and Immortality and of kinship with all beings. Your innate Divinity is your reality; discover it, dwell in it, and desire to divulge it. Discover your holiness, your divinity, your truth. You may have doubts as to what is dharma (right conduct), which is sathya (truth), which is prema (love), and so on; but you can have no doubt about yourself, is it not? So, find out who you are and be fixed in that truth. That is enough to save you, and give you everlasting joy.(Divine Discourse, Aug 13, 1964.)
சில ஏக்கர் நிலம், வங்கிக் கணக்கில் கொழுத்த பணம், அல்லது சில பங்களாக்கள் அல்லது கார்கள் என்ற அனைத்து தாழ்வான ஆசைகளை விட்டு விடுங்கள். அவற்றிற்குப் பதிலாக மங்காத ஆனந்தம், ஆழ்ந்த, நிலைகுலையாத, வலுவான ஆனந்தம் - அதாவது தெய்வீகத்தை உணரும் ஆனந்தத்தைப் பெற விரும்புங்கள். ஒருவர் ஆனந்த அமரத்துவத்தின் ஊற்று மற்றும் அனைத்து ஜீவராசிகளுடனான பந்தம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்வதற்கு தன்னை அறிந்து கொண்டாலே போதுமானது. உங்களது உள்ளாmfந்த தெய்வீகமே சத்தியமானது ; அதைக் கண்டு கொள்ளுங்கள்,அதில் உறையுங்கள்; அதை வெளிக் கொண்டு வர விரும்புங்கள். உங்களது புனிதத்துவம், உங்களது தெய்வீகம், உங்களது சத்தியத்தைக் கண்டு கொள்ளுங்கள். உங்களுக்கு தர்மம்,சத்தியம், ப்ரேமை போன்றவற்றைப் பற்றி சந்தேகம் இருக்கலாம்; ஆனால் உங்களைப் பற்றியே சந்தேகம் இருக்க முடியாது அல்லவா? எனவே, நீங்கள் யார் என்று கண்டு, அந்த சத்தியத்தில் நிலையாக இருங்கள். அதுவே உங்களைக் காத்து, உங்களுக்கு நிரந்தரமான ஆனந்தத்தை அளிக்க வல்லது.