azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as there is a method to pull down an old building, there is a method to be followed in pulling down the complex structure of your mind. You can definitely achieve success by systematic efforts and become a master of yourself. The ladder must be as tall as the height to which you wish to climb, is it not? So too, your spiritual practice must be carried on till Realization (Sakshathkaram) is gained. The rice in the pot must be well boiled to become soft and tasty. Until that happens, the heat must be on. So too, in the vessel of body, with the water of the senses, boil the rice (mind), until it is cooked soft. The heat is your spiritual practice (Sadhana). Keep your Sadhana on, bright and shining; the jeeva (Individual) will at last become Deva (God).(Divine Discourse, May 17 1964.)
எவ்வாறு ஒரு பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு என்று ஒரு முறை உள்ளதோ, அவ்வாறே உங்கள் மனதின் சிக்கலான கட்டுமானத்தைத் தகர்ப்பதற்கும் ஒரு முறை உள்ளது. முறையான முயற்சிகளின் மூலம் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்று, உங்களுக்கே நீங்கள் அதிபதி ஆகலாம். நீங்கள் ஏற நினைக்கும் உயரத்தின் அளவிற்கு ஏணியும் இருக்க வேண்டும் அல்லவா? அதைப் போலவே, ஆத்ம சாக்ஷாத்காரம் பெறும் வரை உங்களது ஆன்மீக சாதனைகளை கட்டாயம் செய்து கொண்டே இருக்க வேண்டும். பானையில் உள்ள அரிசி நன்கு வெந்து, மிருதுவாகவும் சுவையாகவும் ஆகும் வரை அதைக் கொதிக்க வைத்தே ஆக வேண்டும். அப்படி ஆகும் வரை வெப்பம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதைப் போலவே, உடல் என்னும் இந்தப் பானையில், புலன்கள் என்ற நீரினால்,மனம் எனும் அரிசியை அது மிருதுவாக வேகும் வரை, கொதிக்க வையுங்கள். உங்களது ஆன்மீக சாதனையே வெப்பமாகும். உங்களது ஆன்மீக சாதனையை சிறப்பாகவும் ,ஒளி மயமாகவும் தொடருங்கள்; இறுதியில் ''ஜீவன்'', '' தேவன்'' ஆக மாறும்.