azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 26 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 26 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

All the five elements have been created by the Will of the Supreme. They have to be used with reverential care and vigilant discrimination. Reckless use of any of them will only rebound on you with tremendous harm. External nature has to be handled with caution and awe. So too, handle your inner 'nature,' your internal instruments! While the eye, the ear and the nose serve as instruments of knowledge about one particular characteristic (form, sound or smell) of Nature, the tongue makes itself available for two purposes: to judge taste and to communicate. So you must control the tongue with double care, since it can harm you physically and mentally. Without the control of the senses, spiritual practices (sadhana) are ineffective. If the senses are given full sway, it is like storing water in leaky pot. Pathanjali (the celebrated author of the Yogasuthras) said that if tongue is conquered, victory is yours.(Divine Discourse, Nov 23, 1968.)
பஞ்சபூதங்களும் பரமாத்மாவின் ஸங்கல்பத்தினாலேயே சிருஷ்ட்டிக்கப் பட்டுள்ளன. அவற்றை பயபக்தியுடனான கவனத்துடனும்,விழிப்பான பகுத்தறிவுடனும் பயன்படுத்த வேண்டும்.அவற்றில் எதையும் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவது பயங்கரமான துன்பத்தையே உங்கள் மீது திரும்பத் தாக்குமாறு செய்து விடும். வெளி உலக இயற்கையை கவனத்துடனும், பயபக்தியுடனும் கையாள வேண்டும். அதைப் போலவே, உங்களது உள் '' இயற்கை ''- அதாவது உள் உபகரணங்களையும் கையாளுங்கள்! கண்,( உருவம்), காது ( ஒலி) மற்றும் மூக்கு ( வாசனை) என்ற ஒவ்வொன்றும், இயற்கையின் ஒரு குறிப்பிட்ட குணத்தைப் பற்றி அறிய உதவும் உபகரணங்களாக பயன்படும் அதே சமயம்,நாக்கு மட்டும் இரண்டு விதமாக பயன்படுகின்றது: சுவையை உணர மற்றும் பேச. அதனால், நாக்கை நீங்கள் இரட்டிப்பு கவனத்துடன் கட்டுப் படுத்த வேண்டும், ஏனெனில், அது உங்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தீங்கிழைக்க வல்லது. புலனடக்கம் இன்றி ஆன்மீக சாதனைகள் பயனற்றவை. புலன்களை முழுமையாக ஆட்டம் போட அனுமதிப்பது,ஓட்டைகள் நிறைந்த பாத்திரத்தில் நீரைச் சேமிப்பது போலாகும். '' யோகசூத்ரங்களை'' இயற்றிய பதஞ்சலி முனிவர், நாவை அடக்கி விட்டால், வெற்றி உங்களுடையதே என்கிறார்.