azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 25 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 25 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Offer your heart and your entire life to the Lord. Then your adoration will transform and transmute you so fast and completely, that you and He will be merged into One. You will be transformed, as a rock is transformed by the sculptor into an idol, deserving the worship of generations of sincere people. In the process you will have to bear many a hammer stroke, many a chisel-wound, for He is the sculptor. He is but releasing you from petrification! Do not defile time or waste this life and body seeking paltry ends. This life is part of the long pilgrimage you entered when you were born, which may not end even when you die. Never forget this fact. Be pure, alert and humble as pilgrims are. Treasure the good things and the truths you see and hear. Use them as props and promptings for further stages of your soul’s journey.(Divine Discourse, Nov 23, 1968).
உங்கள் இதயத்தையும், உங்கள் வாழ்க்கை முழுவதையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள்.பின்னர் உங்கள் வழிபாடு, உங்களை எவ்வளவு முழுமையாகவும், வேகமாகவும் மாற்றிவிடும் என்றால்,நீங்களும் இறைவனும் ஒன்றரக் கலந்து விடுவீர்கள். எவ்வாறு ஒரு கல்,பல தலைமுறைகளின் உளமார்ந்த பக்தர்களின் வழிபாட்டிற்குத் தகுதி பெறும் விக்ரஹமாக ஒரு சிற்பியால் மாற்றப் படுகிறதோ,அவ்வாறே நீங்களும் மாற்றப் படுவீர்கள். இந்த முறையில், நீங்கள் பல சம்மட்டி அடிகளையும், உளியின் செதுக்கல்களையும் தாங்கிக் கொள்ள நேரிடும், ஏனெனில் இறைவனே அந்த சிற்பி. அவனே உங்களை புடம் போட்டு விடுவிக்கிறான் ! நேரத்தையோ, இந்த வாழ்க்கை மற்றும் உடலையோ அற்ப லாபங்களைத் தேடுவதில் வீணடிக்காதீர்கள்.இந்த வாழ்க்கை நீங்கள் பிறந்த போது ,நீங்கள் புகுந்த புனித யாத்திரையின் ஒரு பகுதியே; அது நீங்கள் இறந்தாலும் முடிவடையப் போவதில்லை.ஒரு போதும் இந்த உண்மையை மறக்காதீர்கள். புனித யாத்ரீகர்களைப் போல தூய்மையாகவும், கவனமாகவும் , பணிவுடனும் இருங்கள். நீங்கள் கேட்டு, கண்ட நல்லவற்றையும்,உண்மைகளையும் பொக்கிஷங்களாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவற்றை, உங்களது ஆத்மாவின் பயணத்தில் மேலும் வரும் கட்டங்களில் துணைகளாகவும்,உந்துதல்களாகவும் பயன்படுத்துங்கள்.