azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 24 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 24 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Unfurl in your heart, the flag of infinite peace (Prashanthi). It should remind you to overcome the urge of low desires, anger and hate when your plans are thwarted; it must exhort you to expand your heart, to embrace all humanity and creation; let it direct you to quieten your impulses and calmly meditate on your own inner reality. Gradually, the lotus of your heart will bloom, from its centre the flame of divine vision of infinite peace will arise. Practise the disciplines of silence, cleanliness and forbearance. In silence, you can hear the voice of God. Through cleanliness you earn purity. By forbearance, you cultivate love. Feel that each moment is a step towards Him. Do everything as dedicated to Him, directed by Him, as work for His adoration, for serving His children. (Divine Discourse, Nov 23, 1968)
உங்கள் இதயத்தில் பிரசாந்திக் கொடியை ஏற்றுங்கள். உங்களது திட்டங்கள் தவிடு பொடியாகும்போது, ஏற்படும் கீழ்த்தரமான ஆசைகள், கோபம், மற்றும் வெறுப்புக்களை வெல்வதற்கு உங்களுக்கு அது ஞாபகப் படுத்த வேண்டும்; அது உங்களது இதயங்களை விசாலப்படுத்தி, அனைத்து மனித குலம் மற்றும் படைப்பையும் அரவணைத்துக் கொள்ளுமாறு தூண்ட வேண்டும்; அது உங்களது உணர்வுகளை அமைதிப் படுத்தி, உங்களது உண்மை நிலையைத் தியானிக்க வழி காட்டட்டும். படிப்படியாக உங்கள் இதயத் தாமரை மலர்ந்து, அதன் மத்தியிலிருந்து பிரசாந்தியின் தெய்வீகக் காட்சியின் சுடர் எழும். மௌனம், சுத்தம் மற்றும் சகிப்புத்தன்மையின் கட்டுப்பாடுகளைக் கடைப் பிடியுங்கள். மௌனத்தில் இறைவனது குரலை நீங்கள் கேட்க முடியும். சுத்தத்தில் இருந்து தூய்மையைப் பெறுகிறீர்கள். சகிப்புத் தன்மையிலிருந்து நீங்கள் அன்பை வளர்த்துக் கொள்கிறீர்கள். ஒவ்வொரு கணமும் இறைவனை நோக்கிச் செல்லும் ஒரு படியாக உணருங்கள். ஒவ்வொன்றையும் அவனுக்கு அர்ப்பணமாக, அவனால் இயக்கப் பட்டு, அவனைப் போற்றுவதற்கான பணியாக, அவனது குழந்தைகளுக்கு சேவை ஆற்றுவதற்காகச் செய்யுங்கள்.