azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 22 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 22 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Today, the typhoon of hatred and falsehood is scattering the clouds of Virtue, Justice and Truth to the far corners of the sky. So long as man is capable of prema (love), dharma (righteousness) will exist, do not doubt it. When you direct that prema to the Lord, your mental make-up will slowly and steadily undergo a revolutionary change. You will share in the sorrows and joys of your fellow-beings and experience bliss that is beyond the temporary gains and losses of this world. Your devotion to the Lord will undergo several changes. An important stage is one where service to the Lord alone matters and service alone is the reward – one does not seek anything more than just the opportunity of doing service Unto Him, to the best of one’s capacity. (Divine Discourse, Mar 24 1958).
இன்று, வெறுப்பு மற்றும் பொய்மை எனும் சூறாவளிக்காற்று, நற்குணங்கள், நீதி மற்றும் சத்தியம் என்ற மேகங்களை வானத்தின் நான்கு திசைகளிலும் சிதற அடித்துக் கொண்டு இருக்கின்றன. மனிதரிடம் ப்ரேமை இருக்கும் வரை, தர்மம் நிலைத்து இருக்கும்; சந்தேகமே வேண்டாம். எப்போது ப்ரேமையை, நீங்கள் இறைவன் பால் செலுத்துகிறீர்களோ, உங்களது மனப்பாங்கு மெதுவாகவும், சீராகவும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை அடையும். உங்களது சகமனிதர்களது சுக, துக்கங்களில் நீங்கள் பங்கு கொண்டு, இந்த உலகின் தற்காலிகமான லாப, நஷ்டங்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். உங்களது இறை பக்தி பலவிதமான மாற்றங்களைப் பெறும். ஒரு முக்கியமான கட்டத்தில், இறைவனது சேவை மட்டுமே அர்த்தமுள்ளதாகவும் அந்த சேவை ஒன்றே அதன் பலனாகவும் ஆகி விடும் - ஒருவரது சக்திக்கு ஏற்ற, இறைவனுக்கு சேவை ஆற்றும் வாய்ப்பினைத் தவிர, வேறு எதையும், ஒருவர் (இந்நிலையில்) நாடுவதில்லை.