azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

I know how systematic you all are in eating and drinking. You take pretty good care of the body. I do not condemn it; I only want that you should take equally good care of the needs of the spirit also. Take a dose of Dhyanam (meditation) and Japam (repetition of holy Names) as the morning breakfast; Puja and Archana (prayer and worship) as lunch at noon; some Sathsang (holy company) or Sathchinthana (holy thoughts) or reading of holy books or Nama likhitha (writing of holy Names) as afternoon tea and snacks; an hour of bhajan as dinner; and a small ten-minute manana (reflection) as the cup of milk before going to bed. This diet is enough to keep your inner being happy and healthy. That is My advice to you today. - BABA
உண்பதிலும், பானங்கள் அருந்துவதிலும் எவ்வளவு முறையாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்கள் உடலை நன்றாக கவனித்துக் கொள்கிறீர்கள். அதை நான் கண்டனம் செய்யவில்லை. அதைப் போலவே, ஆத்மாவின் தேவைகளையும் நீங்கள் சரிசமமாகக் கவனிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். தியானத்தையும், ஜபத்தையும் காலைச் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். அர்ச்சனையையும், பூஜையையும் மதிய உணவாகவும், ஸத்ஸங்கம் அல்லது ஸத்சிந்தனை அல்லது புனித நூல்களைப் படிப்பது அல்லது இறை நாமங்களை எழுதுவது ஆகியவற்றை மதியச் சிற்றுண்டி மற்றும் தேநீராகவும், ஒரு மணி நேர பஜனையை இரவுச் சாப்பாடாகவும், ஒரு பத்து நிமிட நினைவு கூர்தலை (மனனம்) படுக்கச் செல்லும் முன் அருந்தும் ஒரு கோப்பை பாலாகவும் உட்கொள்ளுங்கள். இந்த உணவு அட்டவணை உங்களது ஆன்மாவை ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைத்துக் கொள்வதற்குப் போதுமானது. இதுவே உங்களுக்கு எனது இன்றைய அறிவுரை.