azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 17 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 17 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not be carried away by the modern day talk of establishing absolute equality. Each one has a certain corpus of intelligence and a peculiar bundle of instincts, impulses and past impressions (vasanas). The more you divert or diminish their impact on you, greater the achievements. Use all chances you have to develop good health, skills and character. That is your highest duty. Seize every chance to serve the sick and needy with love. Do not by any action of yours, cause pain to another, nor suffer pain yourself by foolishness or sheer bravado. Make lasting friendships with good and the noble. Honour elders and women. Treat women with the highest respect. By honouring women, you bring honour to yourself and your society. Respect for women is the mark of real culture. (Divine Discourse, Mar 3, 1958.)
முழு சமத்துவத்தை நிலை நாட்டுவது என்ற நவீன காலப் பேச்சைக் கண்டு மயங்கி விடாதீர்கள். ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட புத்திசாலித்தனத்தின் வளமையையும், உணர்வுகள், உந்துதல்கள் மற்றும் முற்பிறவிகளிலிருந்து வரும் வாசனைகளாலாகிய மூட்டைகளையும் உடையவர்கள். எந்த அளவிற்கு அவற்றின் தாக்கத்தை நீங்கள் திசை திருப்பவோ, அல்லது குறைக்கவோ செய்கிறீர்களோ, அந்த அளவு உங்களது சாதனைகள் சிறப்பாக இருக்கும். நல் ஆரோக்யம், திறமைகள் மற்றும் நற்குணங்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுவே உங்களது உயர்ந்த கடமை. நோயால் வாடுவோருக்கும், ஏழைகளுக்கும் சேவை ஆற்றக் கூடிய ஒவ்வொரு வாய்ப்பினையும் கைப்பற்றிக் கொள்ளுங்கள். உங்களது எந்தச் செயலாலும் பிறருக்குத் துன்பம் இழைக்கவோ அல்லது முட்டாள் தனம் அல்லது அசட்டு தைரியத்தால், நீங்களே துன்பப் படவோ செய்யாதீர்கள். நல்லவர்கள் மற்றும் ஆன்றோர்களுடன் நீண்ட நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பெரியோர்களையும், பெண்டிரையும் மதியுங்கள். பெண்டிரை உயர்ந்த மதிப்புடன் நடத்துங்கள். பெண்களை மதிப்பதன் மூலம், உங்களுக்கும், உங்களது சமுதாயத்திற்கும் நீங்கள் மதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். பெண்டிரை மதிப்பதே கலாசாரத்தின் உண்மையான சின்னமாகும்.