azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 15 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 15 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

God is everywhere, and is everything; so, it appears as if He is nowhere, and He is not in anything! For, to know Him you try to identify Him as someone foreign and unique. He is Love, Power, Truth, Wisdom and Beauty. When you accept Love, you accept God. The tender plant of spirituality can grow only in the field of Love. It cannot thrive in the dehydrated loveless land of human hearts. Remove all traces of salinity from your hearts adding to the soil the precious complement of the Name of the Lord. Water it with Faith. Then plant the seedlings of Divinity; have discipline as the fence, and steadfastness as the pesticide to be sprayed. Then, you can reap the rich harvest of Jnana (wisdom), which will free you from the task of cultivation forever. (Divine Discourse, Oct 18, 1969.)
இறைவன் எங்கும் நிறைந்தவன்,அனைத்தும் அவனே; எனவே அவன் எங்கும், எதிலும் இல்லை என்பது போலத் தோன்றுகிறது! ஏனெனில்,அவனை அறிந்து கொள்வதற்கு, நீங்கள் அவனை அந்நியனான மற்றும் தனிப்பட்ட ஒருவனாக இனம் கண்டு கொள்ள முயல்கிறீர்கள். அவனே அன்பு,சக்தி, சத்யம், ஞானம், சுந்தரம். நீங்கள் அன்பை ஏற்றுக் கொள்ளும் போது இறைவனையே ஏற்றுக் கொள்கிறீர்கள்.ஆன்மீகத்தின் இளம் செடி அன்பெனும் நிலத்தில் தான் வளர முடியும். அது காய்ந்து கருகிய நிலமான அன்பற்ற மனித இதயங்களில் செழிக்க முடியாது. =ங்கள் இதயங்கள் எனும் நிலங்களில் இறை நாமம் எனும் விலைமதிப்புள்ள =ரத்தை இட்டு, எஞ்சியுள்ள =வர்ப்புத் தன்மையை, நீக்குங்கள். நம்பிக்கை எனும் நீர் பாய்ச்சுங்கள். பின்னர் தெய்வீகம் எனும் நாற்றுக்களை நடுங்கள்; கட்டுப்பாட்டை வேலியாகக் கொண்டு, நிலைகுலையாமை எனும் பூச்சிக் கொல்லியைத் தெளியுங்கள். பின்னர் நிரந்தரமாக பயிர் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிடும் ஞானம் எனும் பயிரை நீங்கள் வளமான அறுவடையாகப் பெற முடியும்.