azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 14 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 14 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

If you stick to the truth consistently and sincerely, the sense of guilt will not gnaw your heart and cause pain. The easiest habit is speaking the truth and being honest. For, if you start telling lies, you will have to keep count of them and remember how many you have told to whom and be always alert to not contradict one lie with another! Also be aware that it is cowardice that makes you hide the truth. It is hatred that sharpens the edge of falsehood. Be bold and there is no need for a lie. Be full of love and there is no need for duplicity, tricks and ploys. Finally, the most important truth is, if you love a person, then you will automatically feel that they deserve the truth and nothing less than the truth.(Divine Discourse, Apr 3, 1958.)
Soft sweet speech is the expression of genuine love. - Baba
நீங்கள் தொடர்ந்து, உளமார சத்தியத்தை ஒட்டி வாழ்ந்தால், குற்ற உணர்வுகள் இதயத்தை அரித்து, வேதனையை உண்டாக்காது. சுலபமான பழக்கம் சத்தியத்தைப் பேசுவதும், நேர்மையாக இருப்பதும்தான். ஏனெனில், நீங்கள் பொய் சொல்ல ஆரம்பித்தால், அவற்றை எண்ணிக் கொண்டு, எவ்வளவு, யாரிடம் சொன்னோம் என நினைவில் வைத்துக் கொண்டு, ஒரு பொய், மற்றொன்றிற்கு மாறாகப் போய் விடாமல் இருப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டி வந்து விடும்! மேலும், கோழைத்தனமே உங்களை சத்தியத்தை மறைக்கச் செய்கிறது என்பதை உணருங்கள். வெறுப்பே பொய்மையை கூர்மையாக்குகிறது. துணிவுடன் இருங்கள், பொய் பேச வேண்டிய அவசியமே இருக்காது. ப்ரேமை நிறைந்து இருங்கள்; இரட்டை வேடம், தந்திரங்கள் மற்றும் சதித்திட்டங்கள் போன்றவை தேவை இல்லை. இறுதியாக, ஒரு முக்கியமான உண்மை யாதெனில், நீங்கள் ஒருவரை நேசிப்பவரானால், அவர், சத்தியத்திற்குக் குறைவான எதுவும் இன்றி சத்தியத்திற்கே தகுதி ஆனவர் என்பதை இயல்பாகவே உணருவீர்கள்.
இனிய, இதமான பேச்சு, உண்மையான ப்ரேமையின் வெளிப்பாடாகும் --- பாபா