azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Human beings are the only species that can recognize greatness and revere the glorious. Use that capacity, discriminate and get the maximum benefit out of it, in this birth. Be convinced and have firm faith that the Truth will set you free and will protect you. Just as there are two wires, the positive and the negative which are brought together to produce light, so too the Supreme Self (Paramatma) and the spiritual aspirant (Sadhaka) have to meet in Yoga, to receive illumination! So gladly go to the holy places and keep company with the holy and the pious. A magnet attracts pure iron, similarly a sincere aspirant is attracted to only such things that will grant them Joy and Courage.(Divine Discourse, Mar 3, 1958.)
உயிரினங்களில், மனிதர்கள் மட்டுமே உயர்ந்தவற்றை இனம் கண்டு, போற்றத்தக்கவற்றை மதிக்க வல்லவர்கள். இந்தத் திறனை பயன்படுத்தி, இப்பிறவியிலேயே பகுத்தறிந்து அதிக பட்ச பலனைப் பெறுங்கள். சத்தியம் உங்களை விடுவித்து, காப்பாற்றும் என்பதை ஏற்றுக் கொண்டு, அதில் நிலையான நம்பிக்கை கொள்ளுங்கள். எவ்வாறு பாஸிடிவ், நெகடிவ் என்ற இரண்டு மின்கம்பிகளை இணைத்து மின் விளக்கின் ஒளி உண்டாக்கப் படுகிறதோ,அதைப் போலவே, பரமாத்மாவும், ஆன்மீக சாதகனும் யோகத்தில் ஒன்றிணைந்தால் தான், ஞான ஒளி கிடைக்கும் ! எனவே, புனிதத் தலங்களுக்கு விரும்பிச் சென்று, ஆன்றோருடனும், பக்தர்களுடனும் உறவாடுங்கள். ஒரு காந்தமானது தூய இரும்பை ஈர்க்கிறது; அதைப் போலவே, ஒரு உளமார்ந்த சாதகன் தனக்கு சந்தோஷமும்,தைர்யமும் அளிக்கும் விஷயங்களாலேயே ஈர்க்கப் படுகிறான்.