azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 12 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 12 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Every little moment or incident results in sound; be it the falling of an eyelid over the eye or the dropping of dew on a petal. The range of one’s ear is limited to what one can hear. Even a poisonous cobra can be quietened by music. Sound (Naadham) has that property. The child in the cradle stops wailing as soon as the lullaby is sung. It may not carry any meaning that the child interprets, but the sound does soothe the nerves and induce sleep. So too, the sound of a Manthra is as valuable as its meaning. The meaning of the Gayathri Manthra, is very direct and profound. It does not ask for mercy or pardon. It asks for a clear intellect, so that the Truth may be reflected therein correctly, without any disfigurement. This can be chanted by people of all times and will help aspirants to intensify their Sadhana and achieve success. (Divine Discourse, May 16, 1964)
ஒவ்வொரு கணமும் அல்லது நிகழ்வும், கண் இமைகள் கண்களை மூடுவதாக இருந்தாலும் சரி அல்லது பனித் துளிகள் பூவிதழில் விழுவதாக இருந்தாலும் சரி, நாதத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவரது காதுகள் எட்ட வல்ல தூரம் அவரது கேட்கும் திறனுக்கு உட்பட்டது. கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பைக் கூட இசையினால், அமைதியாக்க முடியும். நாதத்திற்கு அந்தத் தன்மை உண்டு. தாலாட்டு பாடியவுடன், தொட்டிலில் உள்ள குழந்தை அழுவதை நிறுத்தி விடுகிறது. குழந்தை புரிந்து கொள்ளக் கூடிய எந்த அர்த்தமும் அதில் இல்லாமல் போகலாம்; ஆனால் அந்த நாதம் நரம்புகளுக்கு இதமளித்து, தூக்கத்தைத் தூண்டுகிறது. அதைப் போலவே, மந்திரங்களின் நாதமும் அவற்றின் அர்த்தத்தைப் போலவே, மதிப்புடையவை. காயத்ரி மந்திரத்தின் பொருள் மிகவும் நேரடியானதும், ஆழ்ந்ததும் ஆகும். அது கருணையையோ, அல்லது மன்னிப்பையோ வேண்டுவதில்லை. அது, சத்தியம் அதில் எந்த விதத் திரிபும் இன்றி சரியாக பிரதிபலிப்பதற்கு ஏற்றவாறு புத்தியைத் தெளிவாக்குமாறு வேண்டுகிறது. இதை மனிதர்கள் எல்லா நேரங்களிலும் உச்சரிக்கலாம்; அது சாதகர்களின் ஆன்மீக சாதனையைத் தீவிரமாக்கி அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தர உதவும்.