azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone has inside them a whole set of animals. You must suppress the tendencies of these animals and encourage the human qualities of love and friendship to shine forth. Begin the cultivation of virtues even when young, it is very important and more beneficial than book-learning. Treat everyone as your own people and even if you cannot do them any good, desist from causing any injury. Burn the lamp of love in the niche of your heart and the nocturnal birds of greed and envy will fly away, unable to bear the light. Love makes you humble, it makes you bend and bow when you see greatness and glory. (Divine Discourse, Mar 3 1958.)
Consider all your acts as worship. Whatever happens accept it gladly as His handiwork, a sign of His compassion. - Baba
ஒவ்வொருவர் உள்ளும் மிருகங்களின் ஒரு கூட்டமே இருக்கிறது. நீங்கள் இந்த மிருக குணங்களை அடக்கி, மனிதப் பண்புகளான ப்ரேமை மற்றும் நட்புணர்வு பரிமளிப்பதை ஊக்குவிக்க வேண்டும். இளமையாக இருக்கும்போதே நற்குணங்களை வளர்ப்பதைத் தொடங்கி விடுங்கள்; அவை மிகவும் முக்கியமானவையும், புத்தக அறிவை விட நன்மை பயப்பவையும் ஆகும். ஒவ்வொருவரையும் உங்களுடையவராகவே கருதுங்கள்; அவர்களுக்கு ஏதேனும் நன்மை செய்ய இயலாவிட்டாலும், அவர்களுக்கு எந்தவிதமான தீங்கும் இழைக்காதிருங்கள். உங்கள் இதயத்தின் தனி இடத்தில் ப்ரேமையின் தீபத்தை ஏற்றுங்கள்; பேராசை மற்றும் பொறாமை என்ற இரவுப் பறவைகள் இந்த ஒளியைத் தாங்க இயலாமல் பறந்தோடி விடும். ப்ரேமை உங்களை பணிவுடையவராக ஆக்கி விடும்; மேன்மை மற்றும் மகத்துவத்தைக் காணும் போது அது உங்களைத் தலை வணங்கச் செய்யும்.
உங்களது அனைத்து செயல்களையும் வழிபாடாகக் கருதுங்கள்; எது நடந்தாலும் அது இறைவனது கைவண்ணம் எனவும், அவனது கருணையின் சின்னம் எனவும் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள் --- பாபா