azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

First, have unshakeable faith that can stand the ridicule of the ignorant, worldly and the low-minded. When someone ridicules you, reflect within yourself - Are they ridiculing my body or soul? If they are ridiculing my body, they are helping me develop detachment! Ridiculing the soul is impossible, for, the Atma is beyond praise or blame, words or thoughts. Then repeat to yourself, “I am the Eternal Self, Pure and Immovable (Nirmala, Nischala) and so I must transcend this feeling.” Secondly, do not worry about ups and downs, loss or gain, joy or grief. You are the creator of your own destiny. You crave for something - when you get it, you feel joyful! If you don't get it, you are in despair. Cut the craving off, and there will be no more swings between joy and grief. Finally, be convinced in the Omnipresence of Divinity. (Divine Discourse, May 16 1964)
Be a servant; a servant of God - then, all strength and joy will be added unto you. - Baba
முதன்முதலில், அறியாத, உலகியலான, கீழ்த்தரமான மனம் கொண்டவரது ஏளனத்தை சகித்துக் கொள்ளக் கூடிய, தளராத நம்பிக்கையைக் கொண்டிருங்கள். யாராவது உங்களை பரிகசித்தால், உங்களுள்ளேயே ஆராயுங்கள்- அவர்கள் எனது உடலை பரகசிக்கிறார்களா அல்லது ஆத்மாவையா? அவர்கள் எனது உடலை பரிகசிப்பதாக இருந்தால், பற்றின்மையை வளர்த்துக் கொள்வதில் அவர்கள் எனக்கு உதவுகிறார்கள்! ஆத்மாவை பரிகசிப்பது என்பது முடியாத காரியம், ஏனெனில், ஆத்மா, புகழ்ச்சி, இகழ்ச்சி, வார்த்தைகள் அல்லது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது. பின்னர் உங்களுக்கே நீங்கள் திரும்பத் திரும்ப, ''நான் நிரந்தரமான, களங்கமற்ற, நிலையான ஆத்மா; எனவே இந்த உணர்வுகளைக் கடந்து நான் இருக்க வேண்டும்” எனக் கூறிக் கொள்ளுங்கள். இரண்டாவதாக, உயர்வு, தாழ்வு, லாபம், நஷ்டம், இன்பம், துன்பம் ஆகியவற்றைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். உங்களது சொந்த தலை விதியை நிர்ணயம் செய்வது நீங்களேதான். ஏதாவது ஒன்றிற்காக நீங்கள் ஏங்குகிறீர்கள் - அது கிடைத்தால் சந்தோஷம் அடைகிறீர்கள்! அது கிடைக்கவில்லை என்றால் துயரம் அடைகிறீர்கள். ஏங்குவதை நீக்கி விடுங்கள்; இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே ஊசலாடுவது பின்னர் இருக்காது. இறுதியாக இறைவனின் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
சேவகனாக, இறைவனது சேவகனாக இருங்கள் - பின்னர் அனைத்து சக்தி, சந்தோஷங்களும் உங்களுடையதாகி விடும் -- பாபா