azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Students and youngsters must have challenging attitude towards things and honour physical labour. You must be eager to be of service to those who need it on account of their disabilities. Honour your elders and do not miss any chance of serving or pleasing them. Whatever gives you health and joy, welcome it - but do not lower yourself by indulging in vulgar pastimes. Do not wander aimlessly in the streets or frequent cinema halls and mix with undesirable company, or cultivate bad habits for fun. Remember that you must raise your motherland to great heights through your hard work and effort. When you develop such virtues, the nation will prosper. (Divine Discourse, Feb 2, 1958.)
மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விஷயங்களை சவால்களாக ஏற்றுக் கொண்டு, உடல் உழைப்பை மதிக்கும் மனப்பாங்கு அவசியம். தங்களது உடல் ஊனங்களின் காரணமாக உதவி தேவைப்படுவோருக்கு சேவை ஆற்ற நீங்கள் ஆர்வம் கொள்ள வேண்டும். பெரியோர்களை போற்றுங்கள்; அவர்களுக்கு சேவை ஆற்றும் அல்லது அவர்களை மகிழ்விக்கும் வாய்ப்புக்களை நழுவ விடாதீர்கள். உங்களுக்கு ஆரோக்கியமும், ஆனந்தமும் தருபவற்றை வரவேற்பு செய்யுங்கள். ஆனால், ஆபாசமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, உங்களையே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். குறிக்கோள் இன்றி தெருக்களில் சுற்றுவதையோ, திரை அரங்குகளில் திரிவதையோ, விரும்பத்தகாத நட்பு வட்டங்களில் பழகுவதையோ, விளையாட்டிற்காக தீய பழக்கங்களை வளர்த்துக் கொள்வதையோ செய்யாதீர்கள். உங்கள் தாய்நாட்டை உங்களது கடின உழைப்பாலும், முயற்சியாலும் மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இப்படிப்பட்ட நற்குணங்களை வளர்த்துக் கொண்டால், நாடும் நலம் பெறும்.