azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The Grace of the Lord cannot be won by a little pretence of non-attachment (Vairagyam) or just with a few little acts of discrimination (Vivekam). Know and act; realise and also experience - that is the hard path. Surrender yourself to His Will. Life is a great Yajna (sacrificial rite). Allow the Lord to preside over it. Do not ignore Him. This world is not a land of enjoyment (Bhoga Bhoomi). It is a land of sacrifice, of Yoga (union with God), and of righteous actions (Thyaga Bhoomi, Yoga Bhoomi, Karma Bhoomi). Have love and the spirit of unity in work and prayer, I assure you, the Kingdom of the Lord (Rama Rajya) will establish itself again here. (Divine Discourse, Apr 16 1964.)
பற்றின்மை (வைராக்யம்) இருப்பது போல சிறிது நடிப்பதாலோ, விவேகத்துடன் சில காரியங்களை ஆற்றுவதாலோ, இறைவனது அருளை, வென்றிட முடியாது. அறிந்து செயலாற்றுங்கள்; உணருங்கள் மேலும் அனுபவித்துப் பாருங்கள்; அதுவே கடினமான பாதை. இறைவனது ஸங்கல்பத்திற்கு உங்களை சரணாகதி அடையச் செய்து விடுங்கள். வாழ்க்கை ஒரு சிறந்த யாகம் போன்றது. இறைவனை அதற்குத் தலைமை தாங்க அனுமதித்து விடுங்கள். அவனை உதாசீனப்படுத்தாதீர்கள். இந்த உலகம் வெறும் இன்பத்தை அனுபவிப்பதற்கான (போக பூமி) அல்ல. இது தியாகம் செய்வதற்கும் (தியாக பூமி), இறைவனோடு ஒன்றரக் கலப்பதற்கும் (யோக பூமி), தர்ம காரியங்களை ஆற்றுவதற்கும் (கர்மபூமி) ஆன பூமி. ப்ரேமை மற்றும் ஒற்றுமை உணர்வை செயலிலும், பிரார்த்தனையிலும் கொண்டிருங்கள்; ஸ்ரீராம ராஜ்யம் இங்கு மறுபடியும் உருவாகும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.