azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 06 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 06 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

A few elders in Brindavan who revelled in scandalizing Krishna set an ordeal for Radha to test her virtue. Radha was asked to fetch water in a pot from Yamuna to home. Radha, with full faith in Krishna, was immersed in the consciousness of the Lord, that she never bothered to know the condition of the pot. The mud pot she was given had a hundred holes. She immersed it in the river, repeating the name of Krishna as usual, with every intake of the breath and every exhalation. Every time the name Krishna was uttered, a hole was covered, so that by the time the pot was full, it was whole! That was the measure of her faith. Faith can affect even inanimate objects.(- Divine Discourse, Apr 16, 1964.)
You worship with faith and you experience Grace. Faith results in Grace,without your being aware of it. - Baba
ஸ்ரீகிருஷ்ணனை அவமதிப்பதில் ஆனந்தம் அடையும், பிருந்தாவனத்தில் இருந்த சில பெரியவர்கள், ராதாவின் கற்பைச் சோதிப்பதற்காக ஒரு கடினமான வேலையைக் கொடுத்தனர். யமுனை நதியிலிருந்து வீட்டிற்கு ஒரு மண் குடத்தில், ராதா தண்ணீர் எடுத்து வரப் பணிக்கப் பட்டாள். இறை உணர்வில் தோய்ந்து, ஸ்ரீகிருஷ்ணரிடம் முழுமையான பக்தி கொண்டிருந்த ராதா அந்த மண் குடம் எப்படி இருந்தது என்பதைப் பற்றிக் கவலைப் படவே இல்லை. அவளுக்குக் கொடுக்கப் பட்ட அந்த மண் குடத்தில் நூறு ஓட்டைகள் இருந்தன. அவள், வழக்கம் போல, ஸ்ரீகிருஷ்ண நாமத்தை, ஒவ்வொரு உள் மூச்சிலும், வெளி மூச்சிலும் ஜபித்துக் கொண்டே அந்தக் குடத்தை நீரில் ஆழ்த்தினாள். ஒவ்வொரு முறை ஸ்ரீகிருஷ்ண நாமம் ஜபிக்கப் பட்டவுடனேயே, ஒவ்வொரு ஓட்டையாக மூடிக் கொண்டே வந்து, அந்தக் குடம் நிரம்பும் போது அது முழுமையானதாக (ஓட்டைகள் இன்றி) ஆகி விட்டது! அதுவே அவளது நம்பிக்கையின் பரிமாணம் ஆகும். நம்பிக்கை ஜடப் பொருட்களைக் கூட பாதிக்க வல்லது.
நம்பிக்கையுடன் வழிபடுங்கள், இறை அருளை அனுபவிப்பீர்கள். நம்பிக்கை, நீங்கள் அறியாமலே, இறை அருளைத் தரும் - பாபா