azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

People suffer because they have all kinds of unreasonable desires and they pine to fulfil them and fail miserably. They attach too much value to the objective world. It is only when attachment increases that you suffer pain and grief. If you look upon the world and all its created objects with the insight derived from the inner vision, the attachment will fade away; you will see everything much clearer, with the Divine glory suffused in its Splendour. Close your external eyes and open your inner eyes – see what a beautiful grand vision emerges from within you, as you go through your daily life. Attachment to the world has limits, but the attachment to the Lord that you develop when your inner eye opens has no limit. Enjoy that Reality, not this false picture from your external eyes. (Divine Discourse, Feb 2, 1958.)
CONSIDER ALL YOUR ACTS AS WORSHIP. WHATEVER HAPPENS
ACCEPT IT GLADLY AS HIS HANDIWORK,A SIGN OF HIS COMPASSION. - BABA
அவர்களிடம் பலவிதமான நியாமற்ற ஆசைகள் இருப்பதாலும், அவற்றை நிறைவேற்ற அவர்கள் பாடுபட்டுத் தோல்வி அடைவதாலும், மனிதர்கள் துன்புறுகிறார்கள். பொருட்களால் ஆன இந்த உலகத்திற்கு மிக அதிகமான முக்கியத்துவத்தை அவர்கள் அளிக்கிறார்கள். பற்றுதல் அதிகமாவதால் தான், நீங்கள் துன்பமும், துயரமும் அடைகிறீர்கள். ஆத்ம திருஷ்ட்டியிலிருந்து பெறும் நுண்ணறிவால், இயற்கை மற்றும் படைப்பின் அனைத்து பொருட்களையும் நீங்கள் நோக்கினால் , பற்றுதல் விலகி விடும்; நீங்களும் கூட அனைத்தையும் தெள்ளத் தெளிவாகவும், தெய்வீக காந்தியில் தோய்ந்துள்ள ஒரு மகிமையுடனும் காண்பீர்கள். புறக்கண்களை மூடி, அகக் கண்களைத் திறந்து பாருங்கள்- நீங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கை நடத்தும் போதே,உங்களுள் இருந்து எப்படிப் பட்ட ஒரு அழகான மகத்தான காட்சி வெளிப்படுகிறது என்பதைக் காணுங்கள். உலகின் மீது கொள்ளும் பற்றுக்கு ஒரு வரையறை உண்டு; ஆனால், உங்கள் அகக்கண் திறக்கும் போது, நீங்கள் இறைவன் பால் கொள்ளும் பற்றிற்கு வரம்பே இல்லை. உங்கள் புறக்கண்களிலிருந்து தோன்றும் இந்த பொய்மையான சித்திரத்தை விடுத்து, அந்த உண்மை நிலையை அனுபவியுங்கள்.
உங்கள் செயல்கள் அனைத்தையும் வழிபாடாகக் கருதுங்கள். எது நடந்தாலும், அதை இறைவனது செயல் மற்றும் அவனது கருணையின் ஒரு சின்னமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்- பாபா