azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 31 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 31 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The temptation to ignore Dharma grows from egoism and the acceptance of false values. The wish to satisfy the lower desire is the root of adharma (unrighteousness). This wish takes hold of you slyly, pretending to be a comrade come to save you, or like a servant come to attend on you, or like a counsellor come to warn you. Wickedness has a thousand tricks to capture your heart. You must be ever alert against the temptation; you often remind others of Dharma when you desire to squeeze some advantage from them. You must remember not only the rights that Dharma confers but also the duties it imposes. (Divine Discourse, Apr 15 1964.)
ANY ACT THAT IS DONE WITH PURITY IN THOUGHT, WORD AND DEED
IS RIGHT CONDUCT (DHARMA). - BABA
தர்மத்தைப் புறக்கணிப்பதற்கான தூண்டுதல் அஹங்காரம் மற்றும் பொய்மையான பண்புகளை ஏற்றுக் கொள்வது ஆகியவற்றின் மூலமே வளருகிறது; ஒரு கீழ்த்தரமான ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமே அதர்மத்தின் அடிப்படைக் காரணமாகும். இந்த விருப்பம், இரவில் வரும் ஒரு திருடனைப் போல அல்லது உங்களைக் காக்க வரும் ஒரு நண்பனைப் போல அல்லது உங்களுக்குப் பணி ஆற்ற வரும் ஒரு சேவகனைப் போல அல்லது உங்களை எச்சரிக்க வரும் ஒரு ஆலோசகரைப் போல, தந்திரமாகவும் உங்களை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறது. தீயவை, உங்களது இதயத்தைக் கவருவதற்கு ஒரு ஆயிரம் தந்திரங்களைக் கொண்டதாகும். இப்படிப் பட்ட தூண்டுதல்களுக்கு எதிராக நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்; நீங்கள் பிறரிடமிருந்து ஏதாவது ஆதாயம் பெற விரும்பும் போது, பல சமயம், நீங்கள் அவர்களுக்கு தர்மத்தை நினைவு படுத்துகிறீர்கள், தர்மம் அளிக்கும் உரிமைகளை மட்டும் அல்லாது, அது இடும் கடமைகளையும், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
சிந்தனை, சொல் மற்றும் செயலின் தூய்மையுடன்
ஆற்றப்படும் எந்தச் செயலும் தர்மமே- பாபா