azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 19 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 19 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You have the perfect freedom to select the Name and Form that gives you necessary encouragement. When you sit for meditation, recite chants on the Glory of God, so that the thoughts that are scattered could be collected. Then gradually your focus on the Lord will intensify. During meditation, the mind often runs after something else, it takes another road! You have to plug that outlet very quickly by recalling the Name and Form of your favourite Lord. See that the even flow of thoughts towards the Lord is not interrupted. Do not allow the mind to go beyond the twin bunds - the Name on one side and Form on the other! Thus you can easily tame your mind.(Divine Discourse, Mar 13 1964.)
Whenever and wherever you put yourself in touch with God, it is the state of meditation. - Baba
உங்களுக்குத் தேவையான ஊக்கம் அளிக்கக் கூடிய இறை நாம, ரூபங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு தாராளமாக இருக்கிறது. தியானத்திற்காக அமரும்போது,சிதறிப் போகும் உங்களது எண்ணங்களை ஒன்று சேர்ப்பதற்காக, இறைவனது மாட்சிமையைப் பற்றிய ஸ்லோகங்களை உச்சரியுங்கள். பின்னர், படிப்படியாக,இறைவன் மீது உங்களது மனக்குவிப்பு தீவிரமடையும். தியானத்தின் போது,மனம் பொதுவாக வேறு ஒன்றின் பின்னால் சென்று,மற்றும் ஒரு பாதையில் சென்று விடும் ! உங்களது இஷ்ட தேவதையின் நாம, ரூபங்களை நினைவு கூறுவதன் மூலம், நீங்கள் அந்த ஓட்டையை விரைவாக அடைத்தே ஆக வேண்டும். இறைவனை நோக்கிய சீரான எண்ண ஓட்டம் தடை படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனமானது , நாமம் ஒரு பக்கம், ரூபம் மற்றொரு பக்கம்-என இரண்டு கரைகளைத் தாண்டிச் செல்ல அனுமதிக்காதீர்கள் ! இவ்வாறு, நீங்கள் உங்கள் மனதை அடக்க முடியும்.
எந்த நேரமானாலும்,எந்த இடமானாலும்,நீங்கள் இறைவனுடன் உங்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ, அதுவே தியான நிலையாகும் - பாபா