azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

When you learn to ride a bicycle, you do not get the skill of balancing immediately. You push the cycle along to a safe and open ground, hop and skip, leaning now and then on one side and another, and make many an attempt to get the balance. Once you get the skill, you never even think or worry about balancing. You automatically make the necessary adjustments. You can now ride through narrow streets and lanes, and even through crowded alleys – you no longer need the large, safe, open ground! So too, practice alone will equip you with deep concentration, that will sustain you even in your most difficult situation. Hence, do not get discouraged that you are not able to concentrate on prayer or meditation for long. It is just the start!(Divine Discourse, Feb 23 1958.)
The first enemy you must win over is an uncontrolled mind. - Baba
நீங்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது,சமநிலைப் படுத்தும் திறன் உங்களுக்கு உடனே வருவதில்லை.அதை, பாதுகாப்பான ஒரு திறந்த வெளிக்குத் தள்ளிச் சென்று,தவ்விக் குதித்து,அவ்வப்போது ஒரு பக்கமும், பின்னர் மறு பக்கமும் சாய்த்து,சமநிலையைப் பெறுவதற்கு பல முயற்சி செய்கிறீர்கள். ஒரு முறை அந்தத் திறனைப் பெற்று விட்டால், நீங்கள் ஒரு போதும் சமநிலைப் படுத்துவதைப் பற்றி நினைப்பதோ,கவலைப் படுவதோ இல்லை.நீங்கள் தானாகவே தேவையான சரிப்படுத்துதல்களைச் செய்து விடுகிறீர்கள். இப்போது,உங்களால் குறுகிய வீதிகள் மற்றும் பாதைகளில், ஏன் ஜன நெருக்கம் உள்ள சந்துகளில் கூட ஓட்டமுடிகிறது - பெரிய,பாதுகாப்பான, திறந்த வெளி உங்களுக்கு இனிமேல் தேவைப் படுவதில்லை ! அதைப் போலவே, பயிற்சி மட்டுமே உங்களுக்கு ஆழ்ந்த மனக் குவிப்பை அளித்து, உங்களது மிகக் கடினமான நேரங்களில் கூடத் தாங்கி நிற்கும்.எனவே, பிரார்த்தனை அல்லது தியானத்தில் அதிக நேரம், உங்களால் மனக்குவிப்புடன் இருக்க முடியவில்லையே என அதைரியப் பட வேண்டாம்.இது வெறும் ஆரம்பமே !
நீங்கள் வெல்ல வேண்டிய முதல் எதிரி, கட்டுக்கடங்காத மனம் தான்- பாபா