azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

When on a pilgrimage, without adequate mental preparation, you may not be able to receive the Grace of God! During pilgrimage, do not act like a postal parcel, which moves from place to place, collecting impressions on the outer wrapper, but not on the core being. Your purpose for a pilgrimage is to strengthen your spiritual inclinations and let the holiness of the place settle in your mind. As a result, your habits must change for the better and your outlook must widen. Your inward vision must become deeper and steadier. You must realize the Omnipresence of God and the oneness of Humanity. You must learn tolerance, patience, charity and service. After the pilgrimage is over, sitting in your own home and ruminating over your experiences you must determine to seek. Aspire to get higher, richer and more real experience of God realization.(Divine Discourse, Feb 28, 1964..)
தீர்த்த யாத்திரைக்குச் செல்லும் போது,தேவையான அளவு மனதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் இறை அருளைப் பெற முடியாமல் போகலாம்! தீர்த்த யாத்திரையின் போது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று, தனது உட்புறத்தில் அல்லாது,தனது வெளிப்புற அட்டையில் முத்திரைகளைப் பதித்துக் கொள்ளும் தபால் பார்சலைப் போல நடந்து கொள்ளாதீர்கள்.உங்களது தீர்த்த யாத்திரையின் நோக்கமே, உங்களது ஆன்மீக மனப்பாங்கை உறுதியாக்கிக் கொள்வதும், அந்த இடத்தின் புனிதத்துவத்தை உங்கள் மனதில் படியச் செய்து கொள்வதும் தான். அதன் பலனாக,உங்களது பழக்க வழக்கங்கள் நல்லபடியாக மாறி, உங்களது நோக்கம் விரிவடைய வேண்டும். உங்களது உள்ளார்ந்த திருஷ்டி ஆழமாகவும்,நிலையானதாகவும் ஆக வேண்டும். நீங்கள் இறைவன் நீக்கமற நிறைந்திருப்பதையும்,மனித குலத்தின் ஒருமைப் பாட்டையும் உணர்தல் வேண்டும். நீங்கள் சகிப்புத் தன்மை,பொறுமை, தான குணம் மற்றும் சேவையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.புனித யாத்திரை முடிந்த பின் உங்கள் சொந்த வீட்டில் அமர்ந்து,உங்களது அனுபவங்களை நினைவு கூர்ந்து, ஆன்மீகத் தேடலுக்கான உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த, வலுவான, மேலும் நிதர்சனமான இறை அனுபவத்தை நாட வேண்டும்.