azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You need not even read the Gita or the Upanishads. You will hear a Gita specially designed for you if you call upon the Lord in your own heart. He is there, installed as your own Charioteer. Ask Him and He will answer. Have the Form of the Lord before you when you sit quietly in a place for meditation and have His Name - that is, any Name when you do japam (repetition of the divine Name). If you do japam, without a Form before you, who is to give the answer? You cannot be talking all the time to yourself. The Form of the Lord you are calling will hear and respond to you. All agitations must cease one day, is it not? Meditation of the Form of the Lord and repetition of His Name are the only means for your mental agitations to cease.(Divine Discourse, Feb 23, 1958.)
God is beyond Name and Form, but He responds to your sincere call, through any one of His many names! - Baba
நீங்கள் ஸ்ரீமத் பகவத் கீதையையோ அல்லது உபநிஷதங்களையோ படிக்கக் கூடத் தேவை இல்லை.நீங்கள் உங்களது சொந்த இதயத்திலிருந்து உளமார இறைவனை அழைத்தால், உங்களுக்காகவே வடிவமைக்கப் பட்ட ஒரு கீதையை நீங்கள் கேட்பீர்கள். அவன் உங்களது தேரோட்டியாக, அங்கேயே உங்கள் இதயத்தில் கொலு வீற்றுள்ளான். அவனைக் கேளுங்கள், அவன் பதிலளிப்பான். நீங்கள் அமைதியாக தியானம் செய்ய ஒரு இடத்தில் அமரும்போது, இறைவனது ஒரு ரூபத்தை உங்கள் முன் வைத்துக் கொண்டு, நீங்கள் ஜபம் செய்யும் அவனது ஒரு நாமத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாம ஜபம் செய்யும் போது, உங்கள் முன் ஒரு ரூபம் இல்லாவிடில், யார் உங்களுக்கு விடை அளிப்பார்கள் ?நீங்கள் உங்களிடமே எப்பொழுதும் பேசிக் கொண்டு இருக்க முடியாது. நீங்கள் அழைக்கும் இறைவனது ரூபம் உங்களைக் கேட்டு, உங்களுக்குப் பதில் அளிக்கும். மனக் கலக்கங்கள் நீங்குவதற்கு இறை ரூபத்தை தியானிப்பதும், இறை நாமத்தை ஜபிப்பதுமே ஒரே வழி.
இறைவன் நாம , ரூபங்களுக்கு அப்பாற்பட்டவன்; ஆனால் அவனது பல நாமங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் நீங்கள் உளமார அழைத்தால்,அவன் பதிலளிப்பான்- பாபா