azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 04 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 04 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Every struggle to realize the Unity behind all the multiplicity is a step on the path of Divine Life. You have to churn the milk if you wish to separate and identify the butter that is present within it. So too, carry on with life and purify your thoughts and action in order to get unshakeable faith. Divine Life does not admit the slightest dross in character or delusion in the intellect. People dedicated to divine life must emphasize this by precept and practice. Wipe out the root cause of anxiety, fear and ignorance, if any, within you. Then your true personality will shine forth. Anxiety is removed by faith in the Lord, the faith that tells you whatever happens is for the best and that the Lord’s will be done. Sorrow springs from egoism, the feeling that you do not deserve to be treated so badly, that you are left helpless. Sorrow disappears when egoism goes! (Divine Discourse, April 1957.)
Your life must be based on the principle of surrender to the Divine. - Baba
இந்த வேற்றுமைகளில் எல்லாம் உள்ள ஒற்றுமையைக் காண்பதற்கான ஒவ்வொரு போராட்டமும் தெய்வீக வாழ்க்கைப் பாதையின் படிகளாகும். அதில் உள்ள வெண்ணையைக் கண்டு ,பிரித்து எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் பாலைக் கடைந்தே வேண்டும். அதைப் போலவே, உங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு, நிலை குலையாத நம்பிக்கையைப் பெறுவதற்காக, எண்ணங்களையும் ,செயல்களையும் தூய்மைப் படுத்துங்கள். தெய்வீக வாழ்க்கை உங்கள் குண நலன்களில் ஒரு சிறிதளவு மாசையோ அல்லது புத்தியில் குழப்பத்தையோ அனுமதிக்காது. தெய்வீக வாழ்க்கைக்குப் பணிந்தவர்கள் இதை கொள்கையிலும்,நடத்தையிலும் வலியுறுத்த வேண்டும். கலக்கம், பயம் மற்றும் அறியாமை ஏதாவது உங்களுள் இருந்தால் , அவற்றை அடியோடு அகற்றி விடுங்கள். பின்னர் உங்களது உண்மையான ஸ்வருபம் ஒளி விட்டுப் பிரகாசிக்கும். இறைவன் மீது கொண்ட நம்பிக்கை அதாவது,எது நடந்தாலும் அது சிறந்ததே; இறைவனின் சித்தப் படியே அனைத்தும் நடக்கும் என்ற நம்பிக்கை ,கலக்கத்தை நீக்கும்.துயரம் அதாவது,நீங்கள் இப்படி மோசமாக நடத்தப்படத் தகுந்தவர் இல்லை மற்றும் நீங்கள் ஆதரவின்றி விடப்பட்டு உள்ளீர்கள் என்ற உணர்வு, அஹங்காரத்திலிருந்தே எழுகிறது. அஹங்காரம் போய்விடும் போது, துயரம் மறைந்து விடும் !
உங்கள் வாழ்க்கை இறைவனிடம் சரணாகதி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இருத்தல் வேண்டும் - பாபா