azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 03 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 03 Mar 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The world is building itself upon the sandy foundation of the sensory world. Like the monkey which could not pull its hand out of the narrow necked pot, because it first held in its grasp a handful of groundnuts which the pot contained, people are suffering today. They are unwilling to release their hold on the handful of pleasurable things they have grasped from the world. When people do not place faith in the Self, but pursue their senses alone, the danger signal is up! People are stuck with the wrong belief that the accumulation of material possessions will endow them with joy and peace. Divine Love alone can give you everlasting joy. Divine Love alone will remove anger, envy and hatred.(Divine Discourse, 28 Feb 1964.)
நிலையற்ற மணல் போன்ற புலன்களின் அஸ்திவாரத்தில் இந்த உலகம் தன்னை நிர்மாணித்துக் கொண்டு இருக்கிறது. குறுகிய வாய் உள்ள குடத்தினுள், தனது கைப்பிடியில் வேர்க்கடலைகளை பிடித்துள்ளதால், கையை வெளியில் எடுக்க இயலாத குரங்கைப் போல, மனிதர்கள் இன்று தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உலகில் அவர்கள் பற்றிக் கொண்ட கையளவே ஆன சுகங்களை தங்கள் பிடியிலிருந்து விடுவதற்கு அவர்கள் விருப்பப் படுவதில்லை. எப்பொழுது மனிதர்கள் ஆத்மாவின் மீது நம்பிக்கை வைக்காது, தங்களது புலன்களை மட்டும் பின்பற்றுகிறார்களோ, அப்போதே அபாயத்தின் அறிகுறி தோன்றி விட்டது எனப் பொருள் ! மனிதர்கள் ஆஸ்தி , சம்பத்துக்களைக் குவித்து வைத்துக் கொள்வது அவர்களுக்கு ஆனந்தத்தையும் ,சாந்தியையும் தரும் என்ற தவறான நம்பிக்கையில் இருக்கிறார்கள். தெய்வீக அன்பு மட்டுமே நிரந்தரமான ஆனந்தத்தை உங்களுக்கு அளிக்க வல்லது. தெய்வீக அன்பு மட்டுமே கோபம்,பொறாமை மற்றும் வெறுப்புணர்ச்சியை நீக்க வல்லது.