azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You must be convinced that 'you' are but the shadow of the Absolute. Of course, it is only at the end of a long and systematic process of Sadhana (spiritual efforts) that you will reach and stay fixed in the state of that Truth; until then, you are likely to identify yourself with this body and forget that the body which casts a shadow is itself a shadow. The first step in that Sadhana is the adherence to Dharma (righteousness) in every individual and social act. The Dharma which is followed in relation to the objective world will automatically lead on to Dharma in the spiritual field also; only you must stick to it through thick and thin. Steadfastness is needed in the path of Righteousness. That alone is the sign of true surrender.(Divine Discourse, Aug 1, 1956.)
நீங்கள் பரப்பரம்மத்தின் நிழலன்றி வேறில்லை என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீண்ட, முறையான ஆன்மீக சாதனையின் இறுதியில் தான், நீங்கள் அந்த சத்தியத்தின் நிலையை அடைந்து அதில் நிலை கொள்வீர்கள் ; அதுவரை உங்களை நீங்கள், உங்களது உடல் எனவே கருதி, நிழலை உருவாக்கும் இந்த உடலும் ஒரு நிழலே என்பதையும் மறந்து விடக் கூடும். இந்த சாதனையின் முதல் படி, ஒவ்வொரு தனிப்பட்ட மற்றும் சமுதாயப் பணியிலும், தர்மத்தைக் கடைப்பிடிப்பதே ஆகும். உலகியலானவற்றில் கடைப் பிடிக்கும் தர்மம், தானாகவே ,ஆன்மீகத் துறையிலும் தர்மத்தைக் கடைப் பிடிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும்; எல்லா நிலைகளிலும் அதைப் பற்றி இருத்தல் மட்டுமே,நீங்கள் செய்ய வேண்டியது. தர்மத்தின் பாதையில் உறுதியுடன் இருப்பது மிகவும் அவசியம்.அது மட்டுமே உண்மையான சரணாகதியின் சின்னமாகும்.