azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 18 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 18 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

God is Supreme Energy (Mahashakthi) and the individual is Deluding Power (Mayashakthi). In this impermanent and ever transforming world, God is the only permanent and fixed entity. In order to realize Him, who is eternal and true, one has no option but to attach oneself to that Source and Sustenance, and offer Him loving devotion and dedicated service. This path is the destiny of one and all, irrespective of age, scholarship, caste, creed, gender or status. When walking along the road, you can watch your shadow, falling on mud, dirt, thorn, sand, wet or dry patches of land. Has anyone ever worried or is affected by the fate of their shadow? No! Everyone knows that the experience of shadow is not eternal and real. So too, you are but the shadow of the Absolute. Internalize this truth – this is the only remedy for all sorrow, travail and pain.(Divine Discourse, Aug 1, 1956.)
All the pains and pleasures one experiences are the results of their own actions and not due to any act of the Divine. - Baba
இறைவன் மஹாசக்தி ஆவான்; தனி மனிதன் மாயா சக்தியாகிறான். நிலையற்ற, எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும் இவ்வுலகில், நிரந்தமானதும் ,நிலையானதும் ஒன்று உண்டென்றால் அது இறைவன் மட்டுமே. நித்ய, சத்யமான அவனை உணர வேண்டும் என்றால், மூலமும், ஆதாரமும் ஆன அவனைப் பற்றிக் கொண்டு,அன்பான பக்தியையும்,உளமார்ந்த சேவையையும் அவனுக்கு அர்ப்பணிப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. வயது,படிப்பு,குலம்,மதம்,இனம் அல்லது தரம் எதுவாயினும், அனைவரது இலக்கிற்கான பாதை இதுவே. நீங்கள் பாதையில் செல்லும் போது, உங்களது நிழல், சேறு, புழுதி,முள்,மணல், ஈரமான அல்லது உலர்ந்த நிலப்பரப்பில் எல்லாம் விழுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவர்களது நிழலின் இந்த விதியை நினைத்து யாராவது கவலைப் பட்டோ அல்லது பாதிக்கப் பட்டோ இருக்கிறார்களா? இல்லை ! ஒவ்வொருவருக்கும் தெரியும், இந்த நிழலில் அனுபவங்கள் நித்ய சத்யமானது அல்ல என்று. அதைப் போலவே, நீங்களும் அந்த பரப்பரம்மத்தின் நிழல் தான். இந்த சத்தியத்தை உள்ளார்ந்ததாக ஆக்கிக் கொள்ளுங்கள்-அனைத்து துன்பங்கள்,போராட்டங்கள் மற்றும் துயரங்களுக்கான ஒரே மருந்து இதுதான்.
ஒருவர் அனுபவிக்கும் இன்ப,துன்பங்கள் அவர்களது செயல்களின் பலனே அன்றி இறைவனது எந்த செயலாலும் ஏற்படுபவை அல்ல - பாபா