azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Never once in the Mahabharatha did Dhuryodhana observe the principles of righteousness towards the Pandava brothers; at last, he had to face the inevitable doom, when Bheema challenged him for the duel which was to lay him low. At that moment, Dhuryodhana, the author of the deceitful gambling game, the house of lac which was set on fire, the insult heaped on the honoured Queen, the slaughterer of Abhimanyu by a pack of ferocious foes who fell upon him - the dark designer of all these iniquities, took refuge in Dharma and started quoting texts. Dharma is not a handy excuse to escape the evil consequences of one’s actions. Righteousness is not to be treated as a means of escape; it is a means of living.( Divine Discourse, 25 Feb 1964.)
மஹாபாரதத்தில் ஒரு முறை கூட துரியோதனன் தனது பாண்டவ சகோதரர்களிடம் தர்மத்தின் கோட்பாடுகளைக் கடைப் பிடிக்கவில்லை; இறுதியில் பீமன் அவனை வீழ்த்தி அழிப்பதற்காக அழைத்த போது, தவிர்க்க இயலாத தனது இறுதி முடிவை அவன் எதிர் கொள்ள நேர்ந்தது. அந்தத் தருணத்தில்,வஞ்சக சூதாட்டம், அரக்கு மாளிகை எரிப்பு, மதிக்கத் தக்க ராணியை அவமதித்தது, பயங்கரமான எதிரிகளின் கூட்டம் பாய்ந்து அபிமன்யுவை படுகொலை செய்தது - இப்படிப் பட்ட கொடிய காரியங்களை படைத்து, வடிவமைத்தவன், தர்மத்தில் அடைக்கலம் பெற முயன்று, சாஸ்திரங்களை எடுத்துக் கூற ஆரம்பித்தானாம். தர்மம் என்பது, ஒருவரது தீய செயல்களின் பலன்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ,கைவசம் உள்ள எளிய மன்னிப்பு முறையல்ல. தர்மத்தைத் தப்பித்துக் கொள்வதற்கான வழியாகக் கொள்ளக் கூடாது; அது வாழ்க்கை வாழ்வதற்கான முறையாகும்.