azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 16 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 16 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion to God is not to be calculated on the basis of the institutions one has started or helped, the temples one has built or renovated, the donations one has given, nor does it depend on the number of times one has written or recited the Names of the Lord, or the time and energy one spent in the worship of Lord. These are not vital - they are not even secondary! Devotion is Divine Love, unsullied by any tinge of desire for the benefit that flows from it or the fruit or consequence of that love. Love knows no particular reason for its manifestation. Divine Love is akin to the love of the river for the sea, the creeper for the tree, the spring for the cliff down which it flows. It is an unchanging loving attitude, a desirable bent of the mind, standing steady through joy and grief, ever sweet - in good times and bad!(Divine Discourse, 25 Feb 1964.)
ஒருவர் நிர்மாணித்த அல்லது உதவிய நிறுவனங்கள்,கட்டிய அல்லது புனருத்தாரணம் செய்த கோவில்கள், அளித்த நன்கொடைகள் ஆகியவற்றை வைத்தோ,அல்லது எவ்வளவு முறை ஒருவர் இறை நாமத்தை எழுதியுள்ளார் அல்லது ஜபித்துள்ளார் என்பதை வைத்தோ, அல்லது எவ்வளவு நோரம் மற்றும் சக்தியை இறைவனை வழிபடுவதில் செலவழித்துள்ளார் என்பதை வைத்தோ, இறைவன் பால் கொண்ட பக்தி கணக்கிடப் படுவதில்லை.இவை அத்தியாவசியமானவை அல்ல- ஏன் இரண்டாம் பட்சமானவை கூட அல்ல ! பக்தி என்பது, அதிலிருந்து பாய்ந்து வரும் பலன் மீது உள்ள ஆசையின் ஒரு கறையாலோ அல்லது அந்த அன்பின் பலன் அல்லது விளைவுகளாலோ, களங்கப் படாமல் இருக்கும் தெய்வீக ப்ரேமையாகும். அன்பு தனது வெளிப்படுதலுக்கான காரணத்தை அறியாதது. நதி கடல் மீது ,கொடி மரத்தின் மீது, ஊற்று தான் பாய்ந்து ஓடும் குன்றின் மீது கொண்ட ப்ரேமையை ஒத்தது தெய்வீக ப்ரேமை. அது, மாறாத நேசமான மனப்பாங்கு, விரும்பத்தக்க மனநிலை, இன்பத்திலும் ,துன்பத்திலும் துணை நிற்பது, நல்ல மற்றும் கெட்ட காலங்களிலும், எப்போதும் இனிமையாக இருக்கும் ஒன்றாகும் !