azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

A renunciant couple were once proceeding through a thick jungle on a pilgrimage to an inaccessible shrine. The husband saw on the footpath a precious stone, shining brilliantly when the Sun’s rays fell upon it from between the leaves. He hastily threw some sand over it with the movement of his foot, so that his wife may not be tempted to pick it up and become a slave to the tinsel. The wife saw the gesture and chided the husband for still retaining in his mind, a distinction between sand and gold. For her, both were the same. This habit of judging and labelling others is a prevalent practice today. What can you know of the inner working of another's mind?(Sathya Sai Speaks, Vol 1, MahaShivarathri 1955.)
The basic quality of devotion is the yearning for realizing oneness with the Divine. - Baba
ஒரு முறை,துறவறம் பூண்ட ஒரு தம்பதியர்,எளிதில் சென்றடைய முடியாத ஒரு புனிதத்தலத்தை நோக்கி, ஒரு அடர்ந்த காட்டின் வழியாக புனித யாத்திரை சென்று கொண்டு இருந்தனர். அப்போது,கணவன்,இலைகளுக்கு நடுவில் சூரிய கிரணங்கள் படுவதால் ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக் கல் நடைபாதையில் இருப்பதைக் கண்டான். அவன் , தனது மனைவி அந்தக் கல்லால் கவரப்பட்டு, அதை எடுத்து அந்த அற்பப் பொருளுக்கு அடிமையாகி விடக் கூடாதே என எண்ணி, அவசரம் அவசரமாக தன் காலால் சிறிது மணலைத் தள்ளி அதை மூடினான். அவன் மனைவி, இந்தச் செயலைக் கண்டு,கணவன் இன்னும் தங்கத்தையும், மண¨லையும் வேறுபடுத்திப் பார்ப்பதை தன் மனதில் தக்க வைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டித்தாள். அவளைப் பொறுத்த வரை அவை இரண்டும் ஒன்றே. பிறரை மதிப்பீடு செய்து அவர் இப்படிப் பட்டவர் எனப் பட்டம் கட்டும் பழக்கம் இன்றும் இருக்கிறது.மற்றவரது உள்மனம் எப்படிப் பணி ஆற்றுகிறது என்பதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
இறைவனுடன் இரண்டறக் கலந்துள்ளோம் என்பதை உணர வேண்டும் என்ற தாபமே பக்தியின் அடிப்படைப் பண்பாகும் - பாபா