azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 04 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 04 Feb 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Spiritual discipline is more arduous than physical discipline. Imagine the tremendous amount of effort undergone by the lady who runs along a wire stretched across the ring underneath a circus tent. The gain is just a few rupees after all. The same steadfastness and systematic effort aimed at a higher reward can endow you with mental balance and you can maintain your equilibrium under the most adverse or the most testing circumstances. But for such spiritual achievements the intellect and other instruments of perception are more important than the limbs. The intellect is the key. Make the intellect the master of your mind and you will not fail. You will fail only when the senses establish mastery over the mind.(Sathya Sai Speaks, Feb 20, 1964.)
உடல் கட்டுப்பாட்டை விட ஆன்மீகக் கட்டுப் பாடு கடுமையானது. சர்க்கஸ் கூடாரத்தின் அடியில் வளையத்திற்குக் குறுக்கே கட்டப் பட்டுள்ள கம்பியின் மீது ஓடும் பெண், உள்ளாகும் கடுமையான முயற்சியை எண்ணிப் பாருங்கள். சில ரூபாய்களைப் பெறும் லாபம் மட்டும் தான் இது. தலைசிறந்த பரிசைக் குறித்து அதே மாதிரியான மன உறுதியுடன்,முறையாக முயற்சி செய்வது உங்களுக்கு சீரான மனதை அளிக்கும்; மிகவும் பாதகமான அல்லது சோதனையான சந்தர்ப்பங்களிலும் சமநிலையை நீங்கள் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஆன்மீக வெற்றிகளுக்கு,உடல் உறுப்புக்களை விட புத்தியும்,புலன்களும் அதிக முக்கியத்துவம் கொண்டவை. புத்தியே மிகவும் முக்கியமானது.புத்தியை உங்கள் மனதின் எஜமானனாக ஆக்கிவிடுங்கள், நீங்கள் தோல்வியே அடைய மாட்டீர்கள். புலன்கள் மனதை ஆதிக்கம் கொண்டு விட்டால் தான் நீங்கள் தோல்வி அடைவீர்கள்.