azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 30 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 30 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You have come into the world to realise yourselves. You come fully equipped with all the instruments needed for that endeavour - viveka, vairaagya and vichakshana (discrimination, non-attachment and skill); and the urge to enlarge your love, enrich your emotions and ennoble your actions. But you have lost your way; you are caught in a morass and are confused by mirages and dreams which you take as real; you run after false colours and cheap substitutes. Remember that everything is subordinated to that supreme task. The body should be fed and kept free from disease. Why? So that it may be fit for spiritual discipline. Spiritual discipline for what? For the realisation of the truth about oneself. The subtle is the basis for the gross; the Divine is the basis for the Human.(Divine Discourse, Feb 20, 1964.)
நீங்கள்,உங்களை உணர்வதற்காகத் தான் இந்த உலகில் வந்திருக்கிறீர்கள். இந்த முயற்சிக்குத் தேவையான அனைத்து உபகரணங்களான விவேகம், வைராக்யம் மற்றும் திறன்களோடும்,உங்கள் அன்பை விரிவுபடுத்தி, உங்கள் உணர்வுகளை மேம்படுத்தி,உங்கள் செயல்களைப் புனிதமாக்கிக் கொள்ளும் ஆவலோடும், வந்துள்ளீர்கள்.ஆனால், நீங்கள் பாதை தவறி விட்டீர்கள்; சகதியில் சிக்கிக் கொண்டு ,கானல்நீர் மற்றும் உண்மையானவை என நீங்கள் கருதும் கனவுகள் ஆகியவற்றால் குழப்பம் அடைகிறீர்கள்; பொய்மையான வண்ணங்கள் மற்றும் மலிவான மாற்றுப் பொருட்களின் பின்னால் அலைந்து திரிகிறீர்கள். ஒவ்வொன்றும் அந்த தலையாய பணிக்காக கீழ்படியப் பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலுக்கு உணவு அளிக்கப்பட்டு அது வியாதிகள் இன்றி பேணப் பட வேண்டும். எதற்காக? அப்படி இருந்தால் தான்,அது ஆன்மீக சாதனைக்கு உகந்ததாக இருக்கும். ஆன்மீக சாதனை எதற்காக?ஒருவர் தன்னைப் பற்றிய உண்மை நிலையை உணர்வதற்காகத் தான். நுண்மையானவையே ( சூக்ஷ்மமே), வெளிப் படையாகக் காணப் படுபவற்றிற்கு (ஸ்தூலத்திற்கு) ஆதாரம்; மாதவனே, மனிதனுக்கு ஆதாரம்.