azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The proprietor of a coffee house goes to the nearby druggist for a pill to ward off his headache, but when the druggist gets a headache he goes to the coffee house for a cup of coffee, which he thinks will cure him. Tastes differ according to temperament and the character one has earned by generations of activity in this world. The Jnaani (wiseman) says, ‘Sarvam Brahma mayam’ (Everything is Divinity); another, a yogi, says all is energy; a third, who is a devotee, says all is the play of the Lord. Each proclaims based on one’s taste and progress in the spiritual path. Do not hurry to ridicule anyone, for all of you are pilgrims, walking along the same road.(Sathya Sai Speaks, Vol 1, Dasara 1953.)
ஒரு காப்பி ஹோட்டல் முதலாளி, அருகாமையில் உள்ள மருந்துக் கடையில் தனது தலை வலியைத் தீர்க்கும் மாத்திரையை வாங்கச் செல்கிறார்; ஆனால் அந்த மருந்துக் கடைக்காரர் தனக்கு தலை வலி வரும் போது, அது தனது தலைவலிக்கு நிவாரணம் அளிக்கும் என நம்பி ,அந்தக் காப்பி ஹோட்டலுக்கு ஒரு கோப்பை, காப்பி அருந்த வருகிறார்.ஒருவரது மனப்பாங்கு மற்றும் ஒருவர் இந்த உலகில் பல தலைமுறைகளாக ஆற்றிய செயல்களின் காரணமாகப் பெற்ற குணநலன்களுக்கு ஏற்றவாறு சுவைகள் மாறுபடுகின்றன. ஒரு ஞானி '' அனைத்தும் பரப்ரம்ம மயம் '' என்கிறார்; அடுத்து ஒரு யோகி அனைத்தும் சக்திமயம் என்கிறார்; மூன்றாவதாக ஒரு பக்தர் இவை அனைத்தும் இறைவனின் லீலை என்கிறார். ஒவ்வொருவரும் தங்களது விருப்பு மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் அடிப்படையில், பிரகடனம் செய்கிறார்கள். அவசரப்பட்டு எவரையும் மட்டம் தட்ட விழையாதீர்கள் ; ஏனெனில் நீங்கள் அனைவருமே ஒரே பாதையில் செல்லும் யாத்தீரிகர்கள் தான்.