azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You are the Formless (Niraakaaram) come in the form of Man (Naraakaaram), the Infinite, come in the role of the finite, the Formless Infinite appearing as the formful infinitesimal, the Absolute pretending to be the Relative, the Atma behaving as the body, the Metaphysical masquerading as the merely physical. The Universal Self is the basis of all being. The sky was there before houses were built under it; it penetrated and pervaded them for some time; then, the houses crumbled and became heaps and mounds; but, the sky was not affected at all. So too, the Atma pervades the body and subsists even when the body is reduced to dust.(Divine Discourse, Feb 19, 1964.)
நீங்கள் மனித உருவமெடுத்து வந்துள்ள அரூபம்;வரையறுக்கப் பட்ட பாத்திரமாக வந்திருக்கும் அண்டசராசரம்;அற்பமான உருவமாகத் தோன்றும் உருவமற்ற பரம்பொருள்; பாமரனாக நடிக்கும் பரப்ரம்மம்; உடலாக நடமாடும் ஆத்மா;கண்களுக்குப் புலப்படும் பொருளாக முகமூடி அணிந்து நடமாடும் நுண்பொருள். பரமாத்மாவே இவை அனைத்திற்கும் ஆதாரம். அதன் கீழ் மாளிகைகள் கட்டப் படும் முன்னரே ஆகாயம் இருந்துள்ளது; அது அவற்றுள் ஊடுருவி, சில காலம் இருக்கிறது. பின்னர் மாளிகைகள் இடிந்து, தரைமட்டமாகி, குவியல்களாகி விடுகின்றன; ஆனால் ஆகாயம் இவை எதனாலும் பாதிக்கப் படுவதில்லை.அதைப் போலவே, ஆத்மாவும் உடலில் ஊடுருவி உறைந்திருந்தாலும்,அந்த உடல் சாம்பலான பின்னும் ஜீவித்திருக்கிறது.