azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

To observe a very small particle, you need a microscope; to see a remote object clearly, you need a telescope. These are yantras or instruments. The instruments that help you visualise the Core that has such contradictory attributes of being minuter than the minutest and more magnificent than the most magnificent, are called Mantras - formulae that save you when you meditate on them. They are also called Tantras (ceremonies and rites) when their practical application has to be emphasised. Faith in the efficacy of these Mantras, in the utility of the procedure prescribed, and in the existence of the Core - all of these are essential for success in the great adventure of acquiring the ultimate knowledge; just as faith in the efficacy of the instrument, in the correctness of the procedure, and in the existence of the material one is seeking to know more about, are essential for the scientist.(Divine Discourse, Feb 19, 1964.)
மிகச் சிறிய பொருளைக் காண்பதற்கு உங்களுக்கு மைக்ராஸ்கோப் தேவை; மிகத் தொலைவில் உள்ள பொருளைத் தெளிவாகக் காண்பதற்கு உங்களுக்கு டெலஸ்கோப் தேவைப் படுகிறது. ஒன்றுக் கொன்று எதிர்மாறான குண நலன்களைக் கொண்ட, அணுவிலும் அணுவான, அண்டத்திலும் அண்டமான அந்த ஆதாரப் பொருளை நீங்கள் மனக்கண் முன் காண உதவும் கருவிகளே மந்திரங்கள் எனப்படுகின்றன- அவற்றை தியானிப்பதால்,உங்களைக் காப்பாற்றும் சூத்திரங்கள் அவை. நடைமுறையில் பயன்படுத்தி, அவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படும்போது,அவை ,'' தந்திரங்கள் '' ( சடங்குகள்) எனவும் அழைக்கப் படுகின்றன. எவ்வாறு ஒரு விஞ்ஞானிக்கு, கருவிகளின் திறனில்,பயன்படுத்தும் முறையின் சரியான தன்மையில், அவர் மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள விழையும் பொருளின் இருத்தலில், நம்பிக்கை அவசியமோ, அவ்வாறே, மந்திரங்களின் செயல் திறனில், விதிக்கப் பட்ட முறைகளின் பயனில், ஆதாரப் பொருள் ஒன்று இருக்கிறது என்பதில் - என இந்த அனைத்திலும் நம்பிக்கை இருப்பது, இறுதியான தலை சிறந்த ஞானத்தை அடைவது என்ற சாகசச் செயலில் வெற்றி பெறுவதற்கு, இன்றியமையாதவை ஆகும்.